மீண்டும் விற்பனைக்கு வரும் ஐபோன் X… அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட்டின் சிறப்பு சலுகைகள்

ஆப்பிளின் ஐபோன் ஐபோன் SE , 5S ,6, 6S, போன்ற போன்களின் அப்டேட்டாக புதிய போன் வாங்க விரும்பினால் உங்களின் தேர்வு ஐபோன் X

By: Updated: November 26, 2018, 06:21:48 PM

Apple iPhone X : ஆப்பிள் கடந்த வருடம் வெளியிட்ட ஆப்பிள் ஐபோன் X-ன் உற்பத்தி முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. ஆப்பிள் ஸ்டோர்களிலும் கூட இந்த போன்கள் விற்பனைக்கு வைக்கப்படவில்லை. ஆனால் இந்தியாவில் பல்வேறு இணைய தளங்களில் இன்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கிறது இந்த மாடல்.

64 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ. 91,900 யில் ஆரம்பமானது. 256 ஜிபி வேரியண்ட்டின் விலை லட்சத்தை தாண்டியது. உங்களின் அடுத்த புதிய போன் ஆப்பிளின் ஐபோன் X என்றால், நீங்கள் இவற்றையெல்லாம் கொஞ்சம் யோசித்துக் கொள்ளுங்கள்.

அதிக விலைக்கு விற்கப்படும் போன்களில் ஐபோன் Xம் உண்டு. ஆனால் இந்தியாவில் இதனை விட குறைவான விலைக்கு ஒன்ப்ளஸ் 6டி மற்றும் சாம்சங் கேலக்ஸி நோட் 9 போன்ற போன்கள் விலைக்கு கிடைக்கின்றன என்பது தான் உண்மை.

மேலும் படிக்க : ஐபோனின் உற்பத்தியை நிறுத்திய ஆப்பிள் நிறுவனம்

Apple iPhone X போன் வாங்க ஃப்ளிப்கார்ட் அளிக்கும் சலுகை

ஃப்ளிப்கார்ட்டில் இந்த போனின் ஆரம்ப விலை ரூ. 85,999 ஆகும். இந்த வருடம் செப்டம்பரில் வெளியான ஐபோன் XS போனை விட இதன் விலை மிகவும் குறைவு. அதன் ஆரம்பக் கட்ட விலையானது ரூ. 99,900 ஆகும். ஆனால் ஐபோன் XRஐ விட இந்த போனின் விலை மிகவும் அதிகம். XRன் ஆரம்பகட்ட விலையானது ரூ.76,900 ஆகும்.

எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்

ஐபோன் 8 ப்ளஸ் போன்ற போன்களை 11 ஆயிரம் ரூபாய்க்கு கொடுத்துவிட்டு ஃப்ளிப்க்கார்ட்டில் இந்த ஐபோன் X – ஐ பெற்றுக் கொள்ளலாம்.

அமேசான் இந்தியாவின் சலுகை

ஐபோன் X (64ஜிபி) போனை ரூ. 79,999க்கு விற்பனை செய்கிறது. எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் பழைய போனை ரூ.16,000க்கு கொடுத்துவிட்டு புதிய போன் வாங்கிக் கொள்ளலாம். ஐபோன் 7 ப்ளஸ் மற்றும் ஐபோன் 8 ப்ளஸ் போன்ற போன்களை கொடுத்து 10 ஆயிரம் எக்ஸ்சேஞ்சில் இந்த போனை வாங்கிக் கொள்ளலாம். எச்.டி.எஃ.சி கிரெடிட் கார்ட் மூலமாக இந்த போனை வாங்குபவர்களுக்கு 5% டிஸ்கவுண்ட் கிடைக்கும்.

ஆப்பிள் ஸ்டோர்களில் இதன் விலை 91,899 ஆகும். இந்த ஐபோனை வாங்க வேண்டும் என்றால் ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் தான் சரியாக இருக்கும். இந்த தீபாவளிக்கு ரூ.69,999 என்ற சிறப்பு சலுகையுடன் விற்பனை செய்யப்பட்டது. ஆப்பிளின் ஐபோன் 6, 6S, ஐபோன் SE , ஐபோன் 5S போன்ற போன்களில்  இருந்து வெளியேறி புதிய ஐபோன் வாங்க விரும்பினால் நீங்கள் அப்டேட்டாக இந்த போனை வாங்கிக் கொள்ளலாம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Apple iphone x does it still make sense to pick up this one

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X