/tamil-ie/media/media_files/uploads/2018/09/d230.jpg)
Apple iPhone XR gets special discount
Apple iPhone XR gets special discount : கடந்த செப்டம்பர் மாதம் ஆப்பிள் நிறுவனம் தஙக்ளின் மூன்று ஐபோன்களை விற்பனைக்கு வைத்தது. ஆப்பிள் எஸ் ஆர், ஆப்பிள் எக்ஸ் எஸ், ஆப்பிள் எக்ஸ் எஸ் மேக்ஸ். இந்த வேரியண்ட் போன்களின் அடிப்படை விலையே 70 ஆயிரத்திற்கு மேல் என்று கூறி இந்திய வாடிக்கையாளர்களின் கையை அப்படியே கட்டிப்போட்டுவிட்டது ஆப்பிள் நிறுவனம்.
அனைவருக்கும் அன்று வெளியான ஆப்பிள் போன்கள் பிடித்தன. அதன் சிறப்பம்சங்கள், நிறம், தொழில் நுட்பம் என அனைத்தும் அனைவருக்கும் பிடித்திருந்தன. என்ன தான் ப்ரீமியம் போன் என்றாலும் இவ்வளவு விலை கொடுத்து யாரும் வாங்க முன்வரவில்லை என்பது தான் உண்மை.
Apple iPhone XR gets special discount
விற்பனை நிலை மந்தமாக தொடங்கியிருக்கும் இந்த நேரத்தில் தங்களின் போன்களை சிறப்பு தள்ளுபடியில் விற்பனை செய்ய முயன்று வருகிறது ஆப்பிள் நிறுவனம். நாளை ஒரு நாள் மட்டும் இருக்கும் இந்த சலுகையை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் Apple iPhone XR -ஐ ரூ.59,900க்குப் பெற்றுக் கொள்ளலாம்.
எச்.டி.எஃப்.சி வாடிக்கையாளர்கள் என்றால் இந்த போனை ரூ. 53,900க்கு இந்த போனை பெற்றுக் கொள்ளலாம். இதிலும் 10% வரையில் கேஷ் பேக் ஆஃபர் உண்டு என்பது கூடுதல் சலுகை. இந்திய இணைய தளங்களில் இந்த போனின் விலை ரூ.76,900 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
அதே போல் ரூ. 81,900க்கு விற்பனையாகும் iPhone XR (128ஜிபி) போனை நீங்கள் நாளைக்கு 64,900 ரூபாய்க்கு வாங்கலாம். எச்.டி.எஃப்.சி வாடிக்கையாளர்கள் ரூ.58,400க்கு இந்த போனை வாங்கிக் கொள்ளலாம்.
மேலும் படிக்க : மீண்டும் ஒரு குட்டி ஐபோனை வழங்கி ஆச்சரியப்படுத்த இருக்கும் ஆப்பிள் நிறுவனம்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.