ஆப்பிள் ஐபோன் XR, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4: ‘ஐஇ தமிழ்’ ஸ்பெஷல் வீடியோ

இந்தியாவில் ரூபாய் 76,900க்கு விற்பனையாகும் பட்ஜெட் போன் இது தான்.

12/09/2018 அன்று ஆப்பிள் மூன்று முக்கியமான ஐபோன்களை வெளியிட்டது ஆப்பிள் நிறுவனம். ஆப்பிள் ஐபோன் XR, ஆப்பிள் ஐபோன் XS, ஆப்பிள் ஐபோன் XS மேக்ஸ் என வெளியான மூன்று போன்களும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

(வாட்ச் குறித்த வீடியோ கீழே உள்ளது)

ஆப்பிள் பார்க் வளாகத்தில் இருக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் வெளியான இந்த மூன்று போன்களும் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பினைப் பெற்றிருக்கிறது. இந்த வருடம் வெளியான மூன்று போன்களிலும் மிகக் குறைந்த விலை கொண்ட போன் ஐபோன் XR ஆகும்.

ஐபோன் XR சிறப்பம்சங்கள்

ஐபோன் XR நிறங்கள்

XR வெள்ளை, கருப்பு, நீலம், மஞ்சள், மற்றும் சிவப்பு வண்ணங்களில் வெளி வர இருக்கிறது. நேற்று வெளியான மூன்று போன்களில் இது தான் பட்ஜெட் போனாகும். இது மூன்று சேமிப்பு வேரியண்ட்களில் வெளியாகிறது.

ஐபோன் XR விலை

64ஜிபி ஐபோன் XRன் விலை ரூபாய் 76,900 ஆகும். 128ஜிபி ஐபோன் XRன் விலை ரூபாய் 81,900 ஆகும். மற்றும் 256 ஜிபி போனின் விலை ரூபாய் 91,900 ஆகும். 12 எம்.பி. கேமராவுடன் வரும் இந்த போனின் அபார்ச்செர் f/1.8.

இதர சிறப்பம்சங்கள்

நேற்று வெளியான மூன்று போன்களில் புதிய போன் இது தான். 6.1 இன்ச் அளவுள்ள இந்த போனின் பின்பக்க அமைப்பானது ஐபோன் எக்ஸ் போலவும் முன்பக்க அமைப்பு ஐபோன் 8ஐப் போலவும் இருந்தது.

2018ற்கான ஐபோன்களின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை

அலுமினியம் போன்ற மெட்டீரியலில் இருந்து இந்த போன் உருவாக்கப்பட்டிருக்கிறது, மற்ற மெட்டீரியல் போல் இது இல்லாமல் இருப்பது கொஞ்சம் வித்தியசமாகப்படலாம். ஆனால் இந்த போன்களில் வரப் போகும் வித்தியாசமான நிறங்களை நீங்கள் நிச்சயமாக ரசிப்பீர்கள்.

மிகவும் விலை குறைந்த பட்ஜெட் போன் இது என்பதால் இதன் திரையும் மெட்டலும் மாற்றப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் 12MPயுடன் கூடிய ஒற்றை பின்பக்க கேமராவை கொண்டிருக்கிறது இந்த போன்.

சிறந்த புகைப்படங்கள் எடுக்க இது போதுமானதாக இருந்தாலும் கூட இயற்கை காட்சிகளை எடுக்கும் அளவிற்கு போதுமானதாக இல்லை என்பதையும் கூறியே ஆக வேண்டும். A12 பையோனிக் ப்ரோசஸ்ஸர் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இதை என்னதான் பட்ஜெட் போன் என்று சொன்னாலும் இந்த போன் இந்தியாவில் ரூபாய் 76,900க்கு தான் விற்பனையாகப் போகிறது. இதனை வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுப்பதுற்குமான வாய்ப்புகளும் குறைவாகவே இருக்கலாம்.

ஆப்பிள் வாட்ச் சீரீஸ் 4 பற்றிய வீடியோ பதிவு : 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close