iPhone 9 Launch : ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான இந்த இரண்டு போன்களின் வருகைக்காக பெரிய அளவு எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தார்கள் வாடிக்கையாளர்கள். அவர்களின் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தது ஆப்பிள் நிறுவனம்.
iPhone 9 Launch எங்கே, எப்போது ?
ஐபோன் XS மற்றும் ஐபோன் 9 செப்டம்பர் 12ல் வெளியாகிறது என அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது ஆப்பிள் நிறுவனம்.
இந்த இரண்டு போன்களுடன் ஆப்பிள் வாட்ச் 4 (Apple Watch Series 4) மற்றும் புதிய ஐபேட் போன்ற தயாரிப்புகளும் வெளிவர இருக்கிறது.
ஆப்பிள் பார்க் கேம்பஸ்ஸில் இருக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் இந்நிகழ்வு நடைபெற உள்ளது. இந்த நிகழ்வின் நேரடை ஒளிபரப்பினை காண விரும்புபவர்கள் ஆப்பிள் டிவி ஆப்பினை பயன்படுத்திக் காணலாம்.
விண்டோ இயங்குதளத்தில் மைக்ரோசாஃப்ட் எட்ஜ் எக்ஸ்ப்ளோரர் என்ற ஆப் வழியாகவும் காணலாம். ஆப்பிள் ஐபோன் அறிமுக விழாவினை பார்க்க இந்த லிங்கினை க்ளிக் செய்தால் போதுமானது. https://www.apple.com/apple-events/september-2018/
ஐபோன் XS மற்றும் ஐபோன் 9 - இன் சிறப்பம்சங்கள் என்னவாக இருக்கும்?
ஐபோன் XS (5.8 இன்ச் மற்றும் 6.5)இந்த இரண்டு ஐபோன்களுமே A12 சிப்செட்டில் இயங்க உள்ளது. மேலும் இரண்டு போன்களும் OLED திரை கொண்டவை. பேஸ் ஐடி மற்றும் கெஸ்ச்சர் பேஸ்ட் கண்ட்ரோல்களுடன் வருகின்றன.
5.8 அங்குல அளவு கொண்ட ஐபோன் XSன் விலை சுமார் 800 அமெரிக்க டாலர்களாகும். (ரூபாய் 56,855). இந்த போனின் 6.5 இன்ச் வெர்சனின் விலை தோராயமாக 1000 அமெரிக்க டாலர்களாகும். (ரூ. 71, 065).
ஐபோன் 9 எல்சிடி திரையுடன் இரண்டு சிம்கார்டுகள் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.