Apple iPhone XR, iPhone XS, iPhone XS Max: Price in India: ஆப்பிள் ஐபோன்கள் நேற்று வெளியான நிலையில் அதனுடைய சிறப்பம்சங்கள் அனைத்தும், இதற்கு முன்பு பல்வேறு வலை தளங்களிலும் இணைய தளங்களிலும் வெளியான தகவல்களுடன் சரியாக பொருந்துகிறதா என்று பார்ப்பது தான் நம்முடைய முதல் வேலையாக நேற்று இருந்தது. ஆப்பிள் பார்க் நிறுவனத்தில் இருக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் நேற்று டிம் குக் தன்னுடைய கீநோட்டினை முடித்துக் கொண்ட உடனே நாங்கள் இதைத்தான் முதலில் செக் செய்தோம்.
Apple iPhone XR Specs, Price & Features
நேற்று வெளியான மூன்று போன்களில் புதிய போன் இது தான். 6.1 இன்ச் அளவுள்ள இந்த போனின் பின்பக்க அமைப்பானது ஐபோன் எக்ஸ் போலவும் முன்பக்க அமைப்பு ஐபோன் 8ஐப் போலவும் இருந்தது.
அலுமினியம் போன்ற மெட்டீரியலில் இருந்து இந்த போன் உருவாக்கப்பட்டிருக்கிறது, மற்ற மெட்டீரியல் போல் இது இல்லாமல் இருப்பது கொஞ்சம் வித்தியசமாகப்படலாம். ஆனால் இந்த போன்களில் வரப் போகும் வித்தியாசமான நிறங்களை நீங்கள் நிச்சயமாக ரசிப்பீர்கள்.

மிகவும் விலை குறைந்த பட்ஜெட் போன் இது என்பதால் இதன் திரையும் மெட்டலும் மாற்றப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் 12MPயுடன் கூடிய ஒற்றை பின்பக்க கேமராவை கொண்டிருக்கிறது இந்த போன்.
சிறந்த புகைப்படங்கள் எடுக்க இது போதுமானதாக இருந்தாலும் கூட இயற்கை காட்சிகளை எடுக்கும் அளவிற்கு போதுமானதாக இல்லை என்பதையும் கூறியே ஆக வேண்டும். A12 பையோனிக் ப்ரோசஸ்ஸர் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இதை என்னதான் பட்ஜெட் போன் என்று சொன்னாலும் இந்த போன் இந்தியாவில் ரூபாய் 76,900க்கு தான் விற்பனையாகப் போகிறது. இதனை வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுப்பதுற்குமான வாய்ப்புகளும் குறைவாகவே இருக்கலாம்.
Apple iPhone XS Specs, Price & Features
ஆப்பிள் ஐபோன் XS, ஆப்பிள் ஐபோன் Xன் அடுத்த வெர்ஷனாகும். S சீரியஸில் வெளியான இந்த போனில் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை. புதிய மாற்றங்களுடன் கூடிய ரெட்டினா திரை மற்றும் ஒலிப்பெருக்கிகளுடன் வருகிறது.
A12 பயோனிக் சிப்செட் ப்ரோசஸ்ஸர் இதிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முதல் 7 நானோ மீட்டர் நீளம் கொண்ட மிகச் சிறைய ப்ரோசஸ்ஸர் இதுவாகும். க்ராபிக்ஸ் முழுத்திறனுடன் வேலை செய்கிறது.

இரட்டைப் பின்பக்க கேமராக்கள் இந்த போனிற்கு மேலும் அழகு சேர்க்கிறது. ஆப்டிக்கள் இமேஜ் ஸ்டப்லைசேசன் கொண்டு இந்த ஐபோன் கேமராக்கள் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு முறை புகைப்படம் எடுத்த பின்பு டெப்த் ஆஃப் பீல்டினை மாற்றிக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் HDR மற்றும் நீயுரல் எஞ்சின் புகைப்படங்கள் எடுக்கும் யுக்தியை மாற்றியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பேஸ்ஐடியை பயன்படுத்துவதற்கு மிகவும் உதவிகரமாக இது இருக்கும் என்று ஆப்பிள் நிறுவனம் கூறியிருக்கிறது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
Apple iPhone XS Max Specs, Price & Features
இதுவரை வெளியான ஐபோனில் இது தான் மிகப்பெரிய ஐபோன் ஆகும். 6.5 அங்குல திரை கொண்டது. 208 கிராம் எடை கொண்ட போன் ஆகும். அனைவருக்கும் இது மிகப் பெரிய போனாக இருக்கும் என்று கூறிட இயலாது. ஆனால் ஒரே கையில் உபயோகிப்பது என்பது மிகவும் கடினமாக இருக்கும்.
இதனுடைய சிறப்பம்சங்கள் அனைத்தும் ஆப்பிள் ஐபோன் XS சிறப்பம்சங்களை ஒத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனுடைய ஒலிப்பான்களில் இருந்து வரும் இசை மிகவும் துல்லியமானதாகும்.
அதிக அளவு பேட்டரித்திறனைக் கொண்டிருக்கும் இந்த போன் ஐபோன், ஐபோன் எக்ஸ்ஸை விட 90 நிமிடங்கள் அதிகமாக உழைக்கும் திறனுடையது. இதுவரை வெளியான போன்களில் ஐபோன் XS மேக்ஸின் பேட்டரி திறன் தான் மிகவும் அதிகமானது.