வெளியான சில நாட்களிலேயே ஆப்பிள் போன்களில் கோளாறு

போன் சார்ஜ் செய்யும் போது பல வகையான பிரச்சனைகள் ஏற்படுவதாக வாடிக்கையாளர்கள் புகார்

போன் சார்ஜ் செய்யும் போது பல வகையான பிரச்சனைகள் ஏற்படுவதாக வாடிக்கையாளர்கள் புகார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Apple event on October 30

Apple event on October 30

ஆப்பிள் ஐபோன் XS மற்றும் XS மேக்ஸ் கடந்த செப்டம்பர் 12ம் தேதி ஆப்பிள் பார்க்கில் இருக்கும் ஸ்டீவ் தியேட்டரில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் கடந்த மாதக் கடையில் உலகெங்கும் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனைக்கு வைக்கப்பட்டது இந்த போன்கள்.

ஆப்பிள் ஐபோன் XS மற்றும் XS மேக்ஸ் பிரச்சனை

Advertisment

ஆனால் அதை வாங்கிய பல வாடிக்கையாளர்கள் தங்கள் போனின் சார்ஜர் சரியாக வேலை செய்யவில்லை என்று புகார் தெரிவித்திருக்கிறார்கள்.  புதிதாக வந்திருக்கும் இந்த போன்களை சார்ஜ் செய்வதற்கு சார்ஜரில் இணைத்தால் அது ஒழுங்காக வேலை செய்யவில்லை என்றும், ஸ்பொராடிக் ஆகிறது என்றும் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்திருக்கிறார்கள்.

ஆப்பிள் ஐபோன் XS மற்றும் XS மேக்ஸ் பிரச்சனை குறித்து வாடிக்கையாளர்கள் புகார்

ஐபோன் XS மேக்ஸ்ஸை சார்ஜரில் போடும் போது போன் எப்போதும் போலவே வேலை செய்கிறது. சிறிது நேரத்தில் சார்ஜ் ஆக ஆரம்பிக்கிறது. ஆனால் சார்ஜ் ஆகிறது என்பதை தெரிவிக்கும் அடையாளக் குறியீடுகள் எதையும் போனில் பார்க்க இயலவில்லை என்று வாடிக்கையாளர் ஒருவர் குறிப்பிட்டிருக்கிறார். மற்றொரு வாடிக்கையாளர் சார்ஜரை பிள்க் இன் செய்து 10-15 நொடிகள் வரை சார்ஜ்ஜே ஆகவில்லை. அதன் பின்னர் தான் போன் சார்ஜ்ஜாக ஆரம்பிக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் படிக்க:  இந்த போன்களின் முதற்பார்வை

Advertisment
Advertisements

மற்றுமொரு வாடிக்கையாளர் இந்த பிரச்சனை பற்றி குறிப்பிட்ட போது ”ஆரம்பத்தில் மிகவும் சிறப்பாக வேலை செய்து வந்தது ஆப்பிள் சார்ஜர். சில நேரங்களில் சார்ஜ் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது. சார்ஜரில் இருந்து போனை பிளக் இன் மற்றும் பிளக் அவுட் செய்து பார்த்த பின்பு 15 நொடிகளுக்கு பின்பு மெதுவாக சார்ஜ் ஆகத் தொடங்குகிறது ஐபோன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

To read this article in English

யூட்யூப் பிரபலம் லெவிஸ் ஹில்ஸெண்டெகர் தன்னுடைய வீடியோ ஒன்றில் ஐபோன் XS மேக்ஸ் போனில் சார்ஜர் குறித்த பிரச்சனையை வீடியோவாக வெளியிட்டிருக்கிறார். அதில் ஆப்பிள் சார்ஜர்களை பயன்படுத்தி ஏனைய போன்களை சார்ஜ் செய்யும் போது சார்ஜ் ஆகிறது. ஆனால் ஐபோன் XS மேக்ஸ் சார்ஜ் ஆகவில்லை என்று வீடியோவை ஆதாரமாக வெளியிட்டிருக்கிறார்.

இது பற்றி ஆப்பிள் இன்சைடரின் அறிவிப்பில் “இது போன்ற பிரச்சனை ஏற்கனவே ஐபோன் 7 மற்றும் 12,9 இன்ச் ஃபர்ஸ்ட் ஜெனரேசன் ஐபேட் ப்ரோ ஆகியவற்றிலும் இருந்தது என்று கூறியுள்ளது. மேலும் இது 'USB restricted mode’ என்ற மோட்’உடன் தொடர்புடையதாக இருக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறது.

Iphone Apple

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: