Advertisment

ஆப்பிள் ஐபோன்கள் முன் பதிவு: இந்தியாவில் எப்போது தொடங்குகிறது என தெரியுமா?

Apple iPhone XS, XR & XS Plus : ஆப்பிள் ஐபோன்கள்: கலிபோர்னியாவில் வெளியான மூன்று ஐபோன்கள் சிறப்புப் பார்வை: என்ன விலை இருக்கலாம் இந்த மூன்று போன்களும்?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Apple iPhone XR world’s best smartphone in Q3 2019

Apple iPhone XR world’s best smartphone in Q3 2019

Apple iPhone XS, XR & XS Plus Expected Price & Specifications : ஆப்பிள் ஐபோன்களின் புதிய மாடல்களை அமெரிக்காவில் நேற்று (செப்டம்பர் 12) ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டது. இந்தியாவில் இவை எப்போது கிடைக்கும்? என்பது ஐபோன் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு!

Advertisment

ஐபோன்கள் தான் போன்களின் பயன்பாட்டினை அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்றது. கணினி சிறிய மொபைலாக மாறியது என்றால் அது ஐபோனினால் மட்டுமே.

ஆப்பிள் நிறுவனம் தான் உலகத்தின் முதல் ட்ரில்லியன் டாலர்களை சம்பாதித்த முதல் நிறுவனம். இன்று ஆப்பிள் ஐபோன் மற்றும் அதனுடன் மற்ற ப்ரோடக்டுகள் வெளியாவது இந்த நிறுவனத்தின் எதிர்காலத்தை மேலும் துல்லியமான வெற்றிப்பாதையை நோக்கி பயணிக்க வைக்கும் என்றால் மிகையாகாது.

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிறுவனத்தில் இன்று வெளிவர இருக்கிறது மூன்று ஐபோன்கள். ஆப்பிள் பார்க் வளாகத்தில் இருக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் திரையரங்கில் இன்று நடக்க இருக்கும் இந்த நிகழ்வினைக் காண அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஐபோன் Xs, ஐபோன் Xs ப்ளஸ் மற்றும் ஐபோன் Xc ஆகிய மூன்று போன்களுடன் புதிய ஐபேட்களும் ஆப்பிள் வாட்ச் 4ம்  வெளியாகியிருக்கிறது. ஒவ்வொரு போனின் சிறப்பம்சங்களையும் கீழே வரும் பகுதியில் காண்போம்.

ஆப்பிள் ஐபோன் Xs மற்றும் ஆப்பிள் ஐபோன் Xs ப்ளஸ் : சிறப்பம்சங்கள்

ஆப்பிள் ஐபோன் புதிய மாடல்கள் அறிமுக நிகழ்வின் மிக கதாநாயகனே இந்த இரண்டு போன்களும் தான். இந்த இரண்டு போன்களையும் சுற்றியே அந்த நிகழ்வு நடந்தது. ஐபோன் எக்ஸ் போன்ற வருடம் வெளியானது. அதன் அடுத்த வெர்ஷன் தான் இந்த இரண்டு போன்களும். இதில் ஐபோன் Xsன் அளவு 5.8 ஆகும். இது அப்படியே சென்ற வருடம் வெளியான ஐபோன் X பெற்றிருக்கும் சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபோன் Xs ப்ளஸ் - இதுவரை வெளியான ஐபோன்களிலே மிகவும் பெரியது இந்த ஐபோன் மட்டுமே. இந்த இரண்டு போன்களுமே OLED டிஸ்பிளேவுடன் கூடிய எட்ஜ் டூ எட்ஜ் வடிவமைப்பில் வெளியாகிறது.

Apple iPhone XS, XR & XS Plus

இந்த இரண்டு போன்களுமே நோட்ச் திரையுடன் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு போன்களிலுமே இரட்டை பின்பக்க கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் ஆப்பிளின் ஃபேஸ் ஐடி தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும்.

ஐபோன் XS ப்ளஸ் பேட்டரி 3000-3400 mAh திறன் கொண்டதாகும். அதே போல் ஐபோன் XS போன் 2600 mAh திறன் கொண்டதாகும். ஆனால் இது அனைத்தும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வெளியான தகவல் மட்டுமே. A12 சிப் செட்டுடன் வெளியாகும் இந்த இரண்டு போன்களுமே ஐஓஎஸ் 12 இயங்கு தளத்தில் இயங்கும்.

To read this article in English

ஆப்பிள் ஐபோன் Xr சிறப்பம்சங்கள்

6.1 அங்குல திரையுடன் வெளியாகும் இந்த போன் LCD திரையுடன் வெளியாக இருக்கிறது. மேலே கூறிய இரண்டு போன்களைப் போலவே எட்ஜ் - டூ -எட்ஜ் டிசைனுடன் கூடிய ஃபேஸ் ஐடியுடன் வலம் வர இருக்கும் புது போனாகும். ஒரே ஒரு பின்பக்க கேமராவுடன் வர இருக்கும் இந்த போனும் ஐஓஎஸ் 12 இயங்குதளத்தில் இயங்க உள்ளது.

இந்தியாவில் எப்போது விற்பனைக்கு வர இருக்கிறது இந்த ஐபோன்கள் ?

செப்டம்பர் 12-ல் இந்த மூன்று போன்களும் அறிமுகமாகின. 14ம் தேதியில் இருந்து ஃபிரி புக்கிங் மூலமாக புக் செய்யப்படும். செப்டம்பர் 21ம் தேதியில் இருந்து விற்பனைக்கு வருகிறது இந்த போன்.

ஐபோன் Xs ப்ளஸ் போனின் விலை 1000 டாலர்களை தொடும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். விலை எதுவாக இருந்தாலும் அறிமுக தினத்தன்று இரவு தான் ஒரே முடிவாக தெரிய வரும்.

ஆப்பிள் ஐபோன் Xrன் விலை

இதை ஒரு பட்ஜெட் போனாக கருத்தில் கொள்ள முடியாது. காரணம் இதன் ஆரம்பகட்ட விலையானது மட்டும் சுமார் 600 டாலரில் இருந்து 699 வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment