ஆப்பிள் 14 நிறுவன செல்போன்கள் இந்தியாவில் மேக் இன் இந்தியா என்ற லேபிளில் தயாராகவுள்ளன. அதன்படி இந்தியாவில் அதிகளவில் ஐபோன்களை தயாரிக்கவும், தாமதமின்றி சந்தைப்படுத்தவும் ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
கடந்த காலங்களில் ஆப்பிள் நிறுவனம் சீனாவில் பெரும்பாலான ஐபோன்களை தயாரித்து சந்தைப்படுத்தியது. தற்போது அமெரிக்காவும் சீனாவும் பொருளாதார ரீதியாக மோதிக்கொள்கின்றன.
சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் அமெரிக்க நிர்வாகத்துக்கு எதிராக முரண்டுபிடித்து வருகிறார். இதனால் ஆப்பிள் ஐபோன் நிறுவனம் மாற்றுவழியை தேர்ந்தெடுத்துள்ளதாக விஷயம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
TF இன்டர்நேஷனல் செக்யூரிட்டிஸ் குழுமத்தின் மிங் சி கூ (Ming-Ci Kuo) போன்ற ஆய்வாளர்கள், ஆப்பிள் இரு நாடுகளிலிருந்தும் அடுத்த ஐபோனை ஏறக்குறைய ஒரே நேரத்தில் அனுப்பும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளனர்,
முன்னதாக, ஐபோன்களின் முதன்மை உற்பத்தியாளரான ஃபாக்ஸ்கான் டெக்னாலஜி குரூப், சீனாவில் இருந்து பொருட்களை அனுப்புவது மற்றும் தென்னிந்திய நகரமான சென்னைக்கு வெளியே உள்ள ஆலையில் ஐபோன் 14 சாதனத்தை அசெம்பிள் செய்யும் செயல்முறையை ஆய்வு செய்தது.
அப்போது, ஆப்பிள் மற்றும் ஃபாக்ஸ்கான் ஆகியவை இந்தியாவிலும் சீனாவிலும் ஒரே நேரத்தில் தொடங்குவது இந்த ஆண்டு யதார்த்தமானது அல்ல, இருப்பினும் இது நீண்ட கால இலக்காகவே உள்ளது என்று கூறுகின்றனர்.
கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட ஆப்பிள் நிறுவனத்தின் கூபர்டினோவின் செய்தித் தொடர்பாளர் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். நாட்டில் ஆப்பிள் தயாரிப்புகளை விநியோகிக்கும் ரெடிங்டன் இந்தியா லிமிடெட், ப்ளூம்பெர்க்கின் ஆரம்ப அறிக்கைக்குப் பிறகு 9.5% வரை உயர்ந்துள்ளது.
சீனாவின் ஐபோன் உற்பத்தியின் வேகத்தை அதிகரிப்பது இந்தியாவிற்கு ஒரு முக்கிய மைல்கல் என்று கூறப்படுகிறது. 2017இல் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஆப்பிள் போன்களை சந்தைப்படுத்துவதை இலக்காக நிர்ணயித்திருந்தது.
ஆனால் அப்போது அது சாத்தியப்படவில்லை. மேலும் மோடி அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தின்கீழ் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
ஆதலால் ஆப்பிள் நிறுவனம் இம்முடிவை எடுத்துள்ளது. இந்தியாவில் உள்ள 140 கோடி மக்கள் ஒரு நம்பிக்கைக்குரிய சந்தையும் இதற்கொரு காரணம் ஆகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”