/tamil-ie/media/media_files/uploads/2019/09/Amazon.jpg)
Apple Music now on Alexa devices
Apple Music now on Alexa devices : ஆப்பிள் பயனாளர்களால் அதிகம் உபயோகப்படுத்தப்படும் ஒரு செயலி ஆப்பிள் மியூசிக். தற்போது அமேசான் நிறுவனத்தின் அலெக்சாவிலும் ஆப்பிள் மியூசிக்கை கேட்கும் வசதி இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது. அமேசானின் எக்கோ டாட், எக்கோ ஷோ 5, எக்கோ, எக்கோ ஸ்பாட், எக்கோ ப்ளஸ், எக்கோ ஷோ, எக்கோ இன்புட் போன்ற டிவைஸ்களில் இனி நீங்கள் ஆப்பிள் மியூசிக் செயலியை பயன்படுத்ஹ்டி 50 மில்லியனுக்கும் மேற்பட்ட பாடல்களை கேட்டு மகிழலாம்.
அலெக்சாவில் நீங்கள் வாய்ஸ் கமெண்ட் கொடுத்தால் அலெக்சா உங்களுக்கு விருப்பமான பாடலை இசைக்கத் துவங்கிவிடும். பாடல், பாடலை பாடிய இசைக்கலைஞர்கள், அல்லது உங்களின் ஃபேவரைட் பாடல்களையும் நீங்கள் கமெண்ட் மூலம் இசைக்கச் சொல்லலாம். உங்களின் சூழலுக்கு ஏற்றவாறும் சோகமான, சந்தோசமான பாடல்களையும் நீங்கள் ஒலிக்கச் செய்யலாம்.
அதற்கு நீங்கள் அலெக்சா ஸ்பீக்கரில் ஆப்பிள் மியூசிக் ஸ்கில்லை எனேபில் செய்ய வேண்டும். பின்னர் அதில் உங்களின் கணக்கினை இணைக்க வேண்டும். இதனை நீங்கள் அலெக்சா ஆப் மற்றும் அமேசான் வெப்சைட் மூலமாக இணைக்கலாம்.
தமிழ், தெலுங்கு, பஞ்சாபி மற்றும் பாலிவுட் பாடல்களை ஒலிபரப்பும் வானொலி நிலைய நிகழ்ச்சிகளையும் நீங்கள் கேட்டுக்கொள்ளலாம். இந்தியாவில் புதிதாக இந்த இணைப்பு நடைமுறைக்கு வர உள்ளது. ஆனால் ஏற்கனவே ஆஸ்திரியா, ஆஸ்திரேலியா, கனடா, ஃப்ரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி, ஜப்பான், நியூசிலாந்து, ஸ்பெய்ன், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் இம்முறை வழக்கத்தில் உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.