Apple One service in India Tamil News: நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 'ஆப்பிள் ஒன்' தொகுக்கப்பட்ட சேவையைக் கடந்த வெள்ளிக்கிழமை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது ஆப்பிள் நிறுவனம். ஆப்பிள் மியூசிக், ஆப்பிள் டிவி +, ஆப்பிள் ஆர்கேட் மற்றும் ஐக்ளவுட் சேமிப்பகத்துடன் இதன் சந்தா நிரம்பியுள்ளது. அதாவது, ஆப்பிள் ஒன் தேர்வு செய்தால் இந்த சேவைகளுக்கான சந்தாக்களை தனித்தனியாகப் பெற வேண்டியதில்லை.
இந்தியாவில், ஆப்பிள் ஒன் சந்தா மாதத்திற்கு ரூ.195 மற்றும் ஒரு தனிநபருக்கு அமெரிக்காவில் 15 டாலர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஃபேமிலி பேக் பொறுத்தவரை, ஆப்பிள் ஒன் சந்தா திட்டத்தின் விலை மாதத்திற்கு ரூ.365 மற்றும் அமெரிக்காவில் 20 டாலர். இந்த சேவையை எப்போது வேண்டுமானாலும் ஆக்டிவேட் செய்துகொள்ளலாம். இந்தியா உட்பட ஆப்பிள் ஒன் சேவையை மற்ற எல்லா சந்தைகளிலும் கிடைக்கச் செய்துள்ளது நிறுவனம்.
தனிப்பட்ட திட்டத்தின் கீழ், ஆப்பிள் மியூசிக், ஆப்பிள் டிவி +, ஆப்பிள் ஆர்கேட் மற்றும் 50 ஜிபி ஐக்ளவுட் சேமிப்பகத்திற்கான சந்தாவையும் ஆப்பிள் வழங்குகிறது. ஃபேமிலி பேக், 200 ஜிபி ஐக்ளவுட் சேமிப்பிடத்தை வழங்குகிறது. மற்ற எல்லா நன்மைகளும் தனிப்பட்ட திட்டத்தைப் பொறுத்தது. இந்த சேவைகளை ஆறு குடும்ப உறுப்பினர்கள் வரை பகிர்ந்து கொள்ளலாம்.
மாணவர்களுக்கு ஆப்பிள் மியூசிக் மாதத்திற்கு ரூ.49, தனிநபர்களுக்கு மாதத்திற்கு ரூ.99, குடும்பங்களுக்கு மாதத்திற்கு ரூ.149 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, ஆப்பிள் டிவி + மற்றும் ஆப்பிள் ஆர்கேட் மாதத்திற்கு ரூ.99-ஆகவும், ஐக்ளவுட் 50 ஜிபிக்கு மாதத்திற்கு ரூ.75 ஆகவும், 200 ஜிபிக்கு மாதத்திற்கு ரூ.219 ஆகவும், 2 டிபிக்கு மாதத்திற்கு ரூ.749 ஆகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் நியூஸ் + மற்றும் ஆப்பிள் ஃபிட்னெஸ் + ஆகியவை அமெரிக்காவில் மாதத்திற்கு 10 டாலர் என நிர்ணயிக்கப்படுகின்றன.
ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் மூன்றாம் அடுக்கு கிடைக்கிறது. இதனை ஆப்பிள் ஒன் பிரீமியர் என்று அழைக்கப்படுகிறது மற்றும் ஆப்பிள் நியூஸ் +, புதிய ஆப்பிள் ஃபிட்னெஸ் + மற்றும் 2TB ஐக்ளவுட் சேமிப்பகத்தை மாதத்திற்கு 30 டாலருக்கு ஆக்டிவேட் செய்யப்படுகிறது.
ஆப்பிள் ஒன் சந்தா செயல்முறை மிகவும் எளிமையானது. ஆப்பிள் ஒன் சந்தாவைப் பெற, முதலில் ஆப்பிள் ஆப் ஸ்டோருக்குச் சென்று சுயவிவரப் படத்தைக் கிளிக் செய்ய வேண்டும். பின்னர் சந்தாக்களைக் கிளிக் செய்து, அதனைத் தொடர்ந்து ‘ஆப்பிள் ஒன் பெறுக’ என்பதன் கீழ் “இப்போது முயற்சிக்கவும்” விருப்பத்தை க்ளிக் செய்யவும். முதல் மாதத்திற்கு, ஆப்பிள் ஒன் சேவையை இலவசமாக அணுக முடியும். இதனைத் தொடர்ந்து மேலும் சேவையைப் பயன்படுத்த விரும்பினால், பணம் செலுத்தி உபயோகிக்கலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"