இந்தியாவில் 25 ஆண்டுகளைக் கொண்டாடும் ஆப்பிள் நிறுவனம், மும்பையில் தனது முதல் சில்லறை விற்பனைக் கடையையும் அதைத் தொடர்ந்து டெல்லியிலும் இந்த வாரம் நிறுவனம் கடை தொடங்க உள்ளது. இப்போது ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் 1 மில்லியன் டெவலப்பர் வேலைகளை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது. நாட்டில் உள்ள டெவலப்பர்களுக்கு ஆப் ஸ்டோர் பணம் செலுத்துவது "2018 ஆம் ஆண்டிலிருந்து மூன்று மடங்கு அதிகமாக உள்ளது" என்று ஆப்பிள் கூறியுள்ளது.
தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் கூறுகையில், "ஆப்பிள் நிறுவனத்தில், உலகெங்கிலும் உள்ள மக்களின் வாழ்க்கையை வளப்படுத்துவதும், அதிகாரம் அளிப்பதும் எங்கள் நோக்கம். இந்தியா அழகான கலாச்சாரம் மற்றும் சிறந்த ஆற்றலைக் கொண்டுள்ள நாடு. எங்கள் வாடிக்கையாளர்களை ஆதரிப்பது, உள்ளூர் சமூகங்களில் முதலீடு செய்வது மற்றும் மனிதகுலத்திற்கு சேவை செய்யும் புதுமைகளுடன் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க ஒன்றிணைந்து செயல்படுவோம்" என்றார்.
இந்திய சந்தையின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, டிக் குக் இந்தியாவின் முதல் ஆப்பிள் ஸ்டோரை மும்பையில் அவரே திறந்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இருப்பினும் அவரது வருகையை நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
2017-ம் ஆண்டில் ஆப்பிள் iOS பயன்பாட்டு வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு சாதனத்தை பெங்களூரில் அமைத்தது, இது டெவலப்பர்கள் தங்கள் பயன்பாடுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உதவியது. ஆப்பிள் 2017 இல் இந்தியாவில் ஐபோன்களை உற்பத்தி செய்யத் தொடங்கியது மற்றும் உற்பத்தி முறைகள் மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்கள் மூலம் நூறாயிரக்கணக்கான வேலைகளை ஆதரித்து வருகிறது.
2030-ம் ஆண்டுக்குள் அதன் விநியோகச் சங்கிலி மற்றும் தயாரிப்புகள் முழுமையாக கார்பன் நியூட்டிரல் ஆக இருக்க வேண்டும் என்று ஆப்பிள் உறுதி கொண்டதன் மூலம் செயலில் உள்ள அனைத்து இந்திய உற்பத்தி விநியோகச் சங்கிலி கூட்டாளர்களும் தங்கள் ஆப்பிள் செயல்பாடுகளுக்கு தூய்மையான ஆற்றலை மட்டுமே பயன்படுத்த உறுதிபூண்டுள்ளனர்.
ஆப்பிள் இனி வடிவமைக்கும் அனைத்து பேட்டரிகளும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் 100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்படும் கோபால்ட் பயன்படுத்துவதாக கடந்த வாரம் ஆப்பிள் அறிவித்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil