ஆப்பிள் ஐபோன் புதிய மாடல்கள்: விலை மற்றும் இதர சிறப்பம்சங்கள் பற்றி ஒரு பார்வை

ஆப்பிள் ஐபோன் புதிய மாடல்களாக ஆப்பிள் ஐபோன் XS, ஆப்பிள் ஐபோன் XS மேக்ஸ் மற்றும் ஐபோன் Xr ஆகியன அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டன.

ஆப்பிள் ஐபோன் புதிய மாடல்களாக ஆப்பிள் ஐபோன் XS, ஆப்பிள் ஐபோன் XS மேக்ஸ் மற்றும் ஐபோன் Xr ஆகியன அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஐபோன் 9

ஐபோன் 9

ஆப்பிள் ஐபோன் புதிய மாடல்களாக ஆப்பிள் ஐபோன் XS, ஆப்பிள் ஐபோன் XS மேக்ஸ் மற்றும் ஐபோன் Xr ஆகியன செப்டம்பர் 12-ம் தேதி இரவு அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டன. அவை வெளியாகும் முன்பே அவற்றின் விலை உள்ளிட்ட விவரங்கள் குறித்து வெளியான செய்திகளின் தொகுப்பு இது!

Advertisment

ஐபோன் 9  வெளியீடு : ஆப்பிளின் ஐபோன் தான், போன்களின் பயன்பாட்டினை அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்றது. ஒவ்வொரு வருடமும் புதிது புதிதாக கேட்ஜெட்டுகளை வெளியிட்டு வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் ஆப்பிளுக்கு நிகர் ஆப்பிள் தான். ஆப்பிள் 8 போன் வெளியானதிற்கு பின்பு, நாளை வெளியாக இருக்கிறது ஆப்பிளின் புதிய போன்.

எங்கே எப்போது வெளியாகிறது ஆப்பிளின் புதிய போன்? 

ஐபோன் XS மற்றும் ஐபோன் 9 செப்டம்பர் 12ல் வெளியாகிறது என அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது ஆப்பிள் நிறுவனம்.  இந்த இரண்டு போன்களுடன் ஆப்பிள் வாட்ச் 4 (Apple Watch Series 4) மற்றும் புதிய ஐபேட் போன்ற தயாரிப்புகளும் வெளிவர இருக்கிறது.

ஆப்பிள் பார்க் கேம்பஸ்ஸில் இருக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் இந்நிகழ்வு நடைபெற உள்ளது.  இந்த நிகழ்விற்காக உலகமே காத்துக் கொண்டிருக்க இந்த நிகழ்ச்சியினை நேரடியாக ஆன்லைனில் காணலாம். அதற்கான ஏற்பாடுகளையும் செய்திருக்கிறது ஆப்பிளின் நிறுவனம்.  இந்த நிகழ்வின் நேரலை ஒளிபரப்பினை காண விரும்புபவர்கள் ஆப்பிள் டிவி ஆப்பினை பயன்படுத்திக் காணலாம்.

Advertisment
Advertisements

To read this article in English 

விண்டோ இயங்குதளத்தில் மைக்ரோசாஃப்ட் எட்ஜ் எக்ஸ்ப்ளோரர் என்ற ஆப் வழியாகவும் காணலாம்.  ஆப்பிள் ஐபோன் அறிமுக விழாவினை பார்க்க இந்த லிங்கினை க்ளிக் செய்தால் போதுமானது.  //www.apple.com/apple-events/september-2018/

ஐபோன் XS ஃபர்ஸ்ட் லுக்

ஐபோன் 9 உடன் ஐபோன் Xs, ஐபோன் Xr, ஐபோன் Xs ப்ளஸ் போன்ற போன்களும் நாளை வெளியாக உள்ளன. அவை அனைத்தும் ஐஓஎஸ் 12 இயங்கு தளத்தில் இயங்க இருக்கிறது. ஐபோன் Xs 5.8 அங்குலத்திலும், ஐபோன் Xs 6.5 அங்குலத்திலும் வெளிவர இருக்கிறாது என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை வெளியாக இருக்கும் அனைத்து போன்களும் ஃபேஸ் ஐடி உடன் வெளிவர உள்ளன. அதே போல் மூன்று போன்களின் முகப்பு கேமராவிலும் ட்ரூ டெப்த் சென்சார் பொருத்தப்பட்டிருக்கிறது.

Iphone

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: