இன்று வெளியாகிறது ஆப்பிளின் மூன்று அசத்தல் ஐபோன்கள்

ஐபோன் 10ல் பார்த்த அதே வடிவம் தான். டிசைனில் எந்த புதிய அப்டேட்டையும் எதிர்பார்க்காதீர்கள்.

Nandagopal Rajan

Apple September Event 2019 : ஆப்பிள் நிறுவனம் மீண்டும் இந்த வருடம் தங்களின் புதிய ஸ்மார்ட்போன்களை அதே ஸ்டீவ் ஜாப் தியேட்டரில், ஸ்பேஸ்ஷிப் வடிவ ஆடிட்டோரியத்தில், உலகமே காத்திருக்கின்ற நிலையில் இன்று மீண்டும் அறிமுகம் செய்ய உள்ளது. இந்திய நேரப்படி இன்று இரவு 10 மணிக்கு இந்த நிகழ்வு துவங்குகிறது. ஆனாலும் புதிதாக வெளியாக இருக்கும் இந்த ஐபோன்களுக்கான எதிர்பார்ப்புகள் அதிகமாகிக் கொண்டே வருகிறது.

 

கடந்த சில ஆண்டுகளாக ஆப்பிள் நிறுவனம் தங்களின் சர்ப்ரைஸ்களை சர்ப்ரைஸ்களாக வைத்திருக்க இயலவில்லை. வெளியாகும் அனைத்து லீக்குகளும் சரியாக இருக்கின்ற வகையில் அப்பட்டமாகவும், மிகவும் துல்லியமாகவும் வெளியாகிறது ஆப்பிளின் சிறப்பம்சங்கள்.  இன்னோவெசன் என்ற வார்த்தைக்கு அதிக அழுத்தம் கொடுத்து “By Innovation Only” என்று இந்த வருடம் அழைப்பிதலை வெளியிட்டுள்ளது ஆப்பிள் நிறுவனம். ஏற்கனவே மூன்று போன்கள் வெளியாகும் என்பது தெள்ளத் தெளிவாய் தெரிந்த பின்பு நீங்கள் எண்ணிக்கை குறித்து அதிகம் கவலைக் கொள்ள வேண்டாம்.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க 

இன்று ஆப்பிள் நிகழ்வில் நாம் என்னென்ன எதிர்பார்க்கலாம்?

ஐபோன் 11-ல் மூன்று வேரியண்ட்டுகள் வெளியாகின்றன. ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ, ஐபோன் 11 மேக்ஸ் மற்றும் ஏற்கனவே கடந்த ஆண்டு வெளியான ஐபோன் 10ஆர் ஸ்மார்ட்போனின் அப்கிரேடட் வெர்ஷன் இன்று வெளியாக உள்ளது.

இந்த வருடம் வெளியாக இருக்கும் ஹையர் எண்ட் ஸ்மார்ட்போனில் மூன்று கேமராக்களுடன் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் ஒரு லென்ஸ் அல்ட்ரா வைட் லென்ஸாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் ஏ13 ப்ரோசசர் இதில் பொறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ் மற்றும் எம்.எல். சிறப்பாக செயல்படும் என்பதால் ஏக குஷியில் இருக்கின்றனர் ஆப்பிள் போன் லவ்வர்கள். இன்று ஆப்பிளின் லேட்டஸ்ட் வாட்ச்கள் வெளியாவதற்கான வாய்ப்புகளும் மிக அதிகமாக இருக்கிறது.

நீங்கள் எதிர்பார்த்தாலும் இன்று என்ன நடக்கப்போவதில்லை?

ஐபோன் 10ல் பார்த்த அதே வடிவம் தான். டிசைனில் எந்த புதிய அப்டேட்டையும் எதிர்பார்க்காதீர்கள். ஏற்கனவே அந்த நிறுவனத்தின் டிசைன் ஹெட் ஜானி ஐவ் வேலையை விட்டு வெளியேறிவிட்டதால் அடுத்த வருடத்தில் தான் எதாவது எதிர்பார்க்க முடியும். அதிக அளவு விலையும் இருக்க வாய்ப்பில்லை தான். டிசைன், ஹார்ட்வேரில் எந்த விதமான புதிய அப்டேட்டும் இல்லாததால், இருப்பதற்கு ஏற்ற மாதிரி தான் விலையும் இருக்கும்.

மேலும் படிக்க : ரூ.200க்கும் குறைவான ரீசார்ஜ் ப்ளான்களை அறிமுகம் செய்த பி.எஸ்.என்.எல் நிறுவனம்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close