ஆப்பிள் ஐபோன் XR : செப்டம்பர் 12ம் தேதி அமெரிக்காவில் இருக்கும் ஜாப்ஸ் தியேட்டரில் இந்த வருடத்திற்கான ஐபோன்களை அறிமுகம் செய்தது ஆப்பிள் நிறுவனம். 3 போன்கள் மற்றும் ஆப்பிள் வாட்ச் சீரியஸ் 4 அன்று அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த போன்களில் மிகவும் குறைந்த விலை போனான ஆப்பிள் ஐபோன் XR, அக்டோபர் 26ம் தேதி விற்பனைக்கு வந்தது. விற்பனைக்கு வந்த நான்கு நாட்களிலேயே சுமார் 90 லட்சம் போன்கள் விற்பனையாகியுள்ளன. ஆனால் ஆப்பிள் நிறுவனம் 1 கோடி போன்கள் விற்பனையாகும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் இந்த விற்பனை அவர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
உற்பத்தி எண்ணிக்கை குறைக்கப்பட்ட ஆப்பிள் ஐபோன் XR
விற்பனை வீழ்ச்சியை தொடர்ந்து போன்களின் தயாரிப்பினை வெகுவாக குறைக்க திட்டமிட்டிருக்கிறது ஆப்பிள் நிறுவனம். ஆப்பிள் இன்சைடர் அறிவிப்பின் படி ஐபோன் எக்ஸ் ஆர் (iPhone XR) உற்பத்தையை நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 2 மில்லியன் யூனிட்டுகளாக குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஐபோன் XRன் ப்ரீபுக்கிங் என்பது ஐபோன் XS போன்களிற்கான ப்ரீபுக்கிங்கை விட மிகவும் குறைவாக உள்ளது. ஆனால் கடந்த ஆண்டு வெளியான ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 ப்ளஸ் போன்களின் ப்ரீபுக்கிங்கை விட மிகவும் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது என டி.எஃப். இண்டெர்நேசனல் செக்யூரிட்டிஸ் நிறுவனத்தின் அனலிஸ்ட்டான மிங் ச்சி குவோ கூறியிருக்கிறார். ஐபோன் XR சிறப்பம்சங்கள் ஒரு பார்வை