Apple, Sony, Amazon, Flipkart Tech Updates Tamil News: கலிபோர்னியாவின் குபேர்டினோவில் உள்ள அதன் தலைமையகத்தில் நடைபெற்ற ஓர் விர்ச்சுவல் நிகழ்வில், நான்கு ஐபோன் 12 மாடல்கள் மற்றும் ஒரு மினி ஹோம் பாட் ஸ்பீக்கரை ஆப்பிள் அறிமுகப்படுத்தியதோடு இந்த வாரம் புதிய கேட்ஜெட்டுகள் பல களமிறங்கின. ஐபோன் 12 மினியின் விலை 69,900 ரூபாயிலிருந்தும், ஐபோன் 12 ப்ரோ மேக்ஸின் விலை 129,900 ரூபாயிலிருந்தும் ஆரம்பமாகின. ஐபோன் 12-ல் உள்ள அனைத்து புதிய ஐபோன்களும் அடுத்த தலைமுறை வயர்லெஸ் சேவையான 5 ஜியை சப்போர்ட் செய்கின்றன. மேலும், இது அதிவேக இணைப்புக்கும் உறுதியளிக்கிறது.
இதனைத் தொடர்ந்து, பிளேஸ்டேஷன் 5 அனைத்து தலைப்புச் செய்திகளையும் ஆக்கிரமித்தது. ஆச்சரிய அறிவிப்பாக்க, இந்தியச் சந்தையில் பிளேஸ்டேஷன் 5 விலையை சோனி வெளிப்படுத்தியது. பிளே ஸ்டேஷன் 5 டிஜிட்டல் பதிப்பின் விலை ரூ.39,990. அதே நேரத்தில், “வழக்கமான” PS5-ன் விலை ரூ.49,990. மைக்ரோசாப்டின் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எஸ் மற்றும் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் உடன் இந்த பிளே ஸ்டேஷன் 5 போட்டியிடும்.
மேலும், அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் தங்கள் வருடாந்திர பண்டிகை கால விற்பனையைத் தொடங்கி, ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற மின்னணு பொருட்களுக்குத் தள்ளுபடி கொடுத்துப் பல புதிய வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளனர்.
ஆப்பிள் ஐபோன் 12 சீரிஸ்
செவ்வாயன்று அதன் வருடாந்திர வெளியீட்டு நிகழ்வில், ஆப்பிள் நான்கு புதிய ஐபோன் 12 மாடல்களை அறிவித்தது. இவை அனைத்தும் 5ஜி வயர்லெஸ் நெட்வொர்க் அணுகலை ஆதரிக்கின்றன. ரூ.79,900 விலையில் ஐபோன் 12, ரூ.69,900 விலையில் 5.4 இன்ச் மினி ஐபோன் 12 தொடங்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. கேமரா திறன்களைக் கொண்ட உயர்நிலை ஐபோன் 12 ப்ரோ ரூ.119,900 விலையிலும், ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் ரூ.129,900 விலையிலும் தொடங்குகிறது. நான்கு புதிய ஐபோன்களும் மேக்ஸேஃப் (MagSafe) உள்ளிட்ட பல அம்சங்களுடன் வருகின்றன. ஆனால், ஹெட்ஃபோன்கள் மற்றும் சார்ஜிங் அடாப்டர்களை நிறுவனம் அகற்றிவிட்டது.
ஐபோன் 12, ஸ்மார்ட்போன் சந்தையில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதற்குக் காரணம் அதிலிருக்கும் 5ஜி திறன். ஆனால், புதிய ஐபோன்களில் 5ஜி திறனை இந்திய வாடிக்கையாளர்கள் முழுமையாகப் பயன்படுத்த முடியாது. விரைவான பதிவிறக்கங்கள், பதிவேற்றங்கள் மற்றும் மேம்பட்ட ஆன்லைன் கேமிங்கை அனுமதிக்கும் 5 ஜி அல்லது ஐந்தாவது தலைமுறை வயர்லெஸ் நெட்வொர்க்குகளை தற்போது எந்த இந்திய ஆபரேட்டர்களும் ஆதரிக்காமல் இருப்பதுதான் அதற்குக் காரணம். செவ்வாய்க்கிழமை நிகழ்வில் ஹோம் பாட் மினி அறிமுகப்படுத்தப்பட்டது. இது, ரூ.9,900 விலையில் அடுத்த மாதம் விற்பனைக்கு வரும்.
இந்தியாவில் பிளே ஸ்டேஷன் விலையை சோனி அறிவித்தது
பிளே ஸ்டேஷன் 5 விரைவில் இந்தியாவுக்கு வருமென சோனி அறிவித்தது. அடுத்த தலைமுறை கன்சோல் 49,990 ரூபாயாகவும், அதே சமயம் டிஸ்க் டிரைவ் கொண்ட பிஎஸ்5 டிஜிட்டல் பதிப்பு 39,990 ரூபாயாகவும் இருக்கும். பிளே ஸ்டேஷன் 5 உடன் பல பாகங்கள் மற்றும் விளையாட்டுகளும் அறிமுகமாகும் என சோனி கூறியது. Demon’s Souls ரீமேக் மற்றும் மார்வெலின் ஸ்பைடர் மேன்: மைல் மோரல்ஸ் அல்டிமேட் எடிஷன் உள்ளிட்டவை ரூ.4,999 விலையில் கிடைக்கும். நவம்பர் 10-ம் தேதி எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸுடன் ரூ.49,990 விலையில் PS5 அறிமுகமாகவுள்ளது. பதிவிறக்கம் செய்த கேம்களை மட்டுமே ஆதரிக்கும் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் S ரூ.34,990 விலையில் கிடைக்கும். சர்வதேச அளவில், வழக்கமான PS5 499 அமெரிக்க டாலர் விலையிலும், PS5 டிஜிட்டல் பதிப்பு 399 அமெரிக்க டாலர் விலையிலும் கிடைக்கும்.
அமேசான், ஃப்ளிப்கார்ட் விற்பனை
இந்தியாவின் பண்டிகை காலத்திற்கு முன்னதாகவே, இந்த வாரம் அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் இருவரும் அந்தந்த ஆன்லைன் ஷாப்பிங் விற்பனையை அறிவித்தனர். ஸ்மார்ட்போன் பிரிவில் சிறந்த விற்பனையாளராக, ஐபோன் எஸ்இ (2020) மற்றும் ஐபோன் 11 ஆகியவற்றின் சலுகைகள் இருக்கின்றன. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3, எக்கோ ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள், சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிஎஸ் 4 கேம்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட தள்ளுபடிகள் இந்தத் தளங்களில் காணமுடியும். இந்த ஆண்டின் அமேசானின் க்ரேட் இந்திய விழா விற்பனை, ஒரு மாத காலத்திற்கு நடைபெறும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.