உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. 7 ஆவது நாளாக போர் நீடிக்கும் நிலையில், பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது. கூகுள், யூடியூப் போன்ற சமூக வலைதளங்கள், ரஷ்ய சேனல்களின் வருவாயை நிறுத்துவது, முடக்குவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், உக்ரைன் மீதான ரஷ்யா படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆப்பிள் நிறுவனம் தனது தயாரிப்பிகளின் விற்பனையை ரஷ்யாவில் நிறுத்துவதாக தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையானது, முன்பு ஆப்பிள் பேக்கான வரம்புகளை விதித்தபிறகு எடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவிற்கு வெளியே உள்ள ஆப் ஸ்டோரில் இருந்து சில ரஷ்ய செய்தி செயலிகளும் நீக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு குறித்து நாங்கள் கவலை கொள்கிறோம். வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுடன் துணையாக நிற்போம். மனிதாபிமான முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்கிறோம். வெளியேறும் அகதிகளுக்கு உதவிகள் செய்கிறோம். மேலும், அங்கிருக்கும் எங்கள் குழுவின் ஊழியர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து வருகிறோம் என குறிப்பிட்டுள்ளனர்.
ரஷ்யாவில் ஆப்பின் ஆன்லைன் ஸ்டோரை அணுக முடியும். இருப்பினும், தயாரிப்புகள் ஸ்டாக் இல்லை என்ற பதிவே திரையில் காட்டும்.
இதுதவிர, உக்ரைன் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆப்பிள் செல்போனில் செயல்பட்டு வரும் ஆப்பிள் மேப், லைவ் டிராக்கிங் மற்றும் டிராபிக் டிராக்கிங் செயலிகளின் சேவைகளை ஆப்பிள் தற்காலிகமாக முடக்கியுள்ளது.
உக்ரைன் துணைப் பிரதமர் மைக்கைலோ ஃபெடோரோவ் கடந்த வாரம் ஆப்பிள் சிஇஓ டிம் குக்கிற்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியிருந்தார். அதில், ரஷ்ய பயனர்களுக்கான ஆப்பிள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
ரஷ்யாவுக்கு எதிராக கொடி காட்டும் நிறுவனங்கள்
ரஷ்யா கண்டனம் தெரிவித்து சேவையை நிறுத்தும் பட்டியலில் ஆப்பிள் சமீபத்தில் இணைந்தது. முன்னதாக, நைக், விசா, மாஸ்டர்கார்டு, நெட்ஃபிளிக்ஸ், டிவிட்டர், யூடியூப் உள்பட பல நிறுவனங்கள், ரஷ்யாவுக்கு வழங்கப்பட்ட சேவையில் மாற்றத்தை கொண்டு வந்தன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil