ஆப்பிள் நிறுவனம் அதன் அனைத்து ஐ.ஓஎஸ் டிவைஸ்களுக்கும் 'பாஸ்வேர்ட்ஸ்' (Passwords) என்ற புதிய ஆப் அறிமுகம் செய்ய உள்ளது. லாக்கின் தரவுகளை மேனேஜ் செய்ய இந்த ஆப் அறிமுகம் செய்யப்படுகிறது. ஆப்பிள் அதன் ஆண்டு நிகழ்வான Worldwide Developers Conference நிகழ்வில் இதை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நிகழ்வு நாளை (ஜுன் 10) தொடங்கப்படுகிறது.
இந்த நிகழ்வில் ஏ.ஐ வசதிகள் உள்ள iOS 18 மற்றும் பிற வசதிகள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய பாஸ்வேர்ட்ஸ் ஆப் என்ன?
ஆப்பிள் முன்னதாகவே iCloud Keychain பயன்படுத்தி ஐ.ஓஎஸ் டிவைஸ்களில் ஐபோன், ஐபேட், விஷன் ப்ரோ ஆகியவற்றில் அதன் பாஸ்வேர்ட்களை save செய்து வைக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதே போன்று சில புதிய அப்கிரேட் உடன் 'பாஸ்வேர்ட்ஸ்' என்ற ஆப் அறிமுகம் செய்கிறது. முன்பு போல் இல்லாமல் இதில், லாக்கின்ஸ் தனியாக இருக்கும். Wi-Fi Networks, passkeys எனத் தனித்தனியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“