iPhone 17 Air: ஐபோன் 17 சீரிஸ் நாளை ரிலீஸ்: 'ஏர்' மாடலில் என்னென்ன எதிர்பார்க்கலாம்? விலை என்ன?

ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் 17 சீரிஸை நாளை (செப்டம்பர் 9 ஆம் தேதி) “Awe Dropping” என்ற நிகழ்ச்சியில் வெளியிட உள்ளது. இந்த வெளியீட்டுக்கு முன்னதாக, ஐபோன் 17 Air-ன் எதிர்பார்க்கப்படும் விலை & சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

author-image
WebDesk
New Update
Apple iPhone 17 Air 2

iPhone 17 Air: ஐபோன் 17 சீரிஸ் ரிலீஸுக்கு தயார்: 'Air' மாடலின் எதிர்பார்ப்புகளும், விலை விவரங்களும்!

ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் 17 சீரிஸை நாளை (செப்டம்பர் 9 ஆம் தேதி) “Awe Dropping” என்ற நிகழ்ச்சியில் வெளியிட உள்ளது. இந்த வெளியீட்டுக்கு முன்னதாக, ஐபோன் 17 Air-ன் எதிர்பார்க்கப்படும் விலை & சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment

ஜே.பி. மோர்கன் நிறுவனத்தின் ஆய்வாளர் சாமிக் சாட்டர்ஜி-யை மேற்கோள் காட்டி, 9to5Mac நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, ஆப்பிள் இந்த ஆண்டு தனது விலை நிர்ணய அணுகுமுறையை மாற்றியமைக்கலாம். அதன்படி, ஐபோன் 17 சீரிஸில் ஐபோன் 17, ஐபோன் 17 ஏர், ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் என 4 வேரியண்ட்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபோன் 17 ஏர்-ன் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

அல்ட்ரா-ஸ்லிம் வடிவமைப்பு: 5.5 மி.மீ. மெல்லிய அலுமினிய ஃபிரேம் மற்றும் 150 கிராமிற்கும் குறைவான எடை. இதுவரை வெளியான பெரிய திரையுடன் கூடிய ஐபோன்களில் இதுவே மிகவும் மெல்லிய மாடலாக இருக்கும். டைட்டானியம் கொண்டு உருவாக்கப்பட்ட Pro மற்றும் Pro Max மாடல்களில் இருந்து வேறுபடும்.

டிஸ்பிளே மற்றும் செயல்திறன்: 6.7-இன்ச் OLED டிஸ்பிளே, 120 Hz ProMotion வசதியுடன். A19 Pro சிப்செட் மற்றும் 12 GB ரேம். புதிய ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் (Apple Intelligence) AI அம்சங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

கேமரா அமைப்பு: பின்புறத்தில் மேம்படுத்தப்பட்ட 48 MP சிங்கிள் கேமரா. செல்பிக்கள் மற்றும் Face ID-க்காக 24 MP TrueDepth முன் கேமரா.

பேட்டரி: 3,000 mAh-க்கும் குறைவான பேட்டரி திறன். பெரிய பேட்டரியை விட, மெல்லிய வடிவமைப்பு மற்றும் செயல்திறனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் விலை

ஐபோன் 17 ஏர்-இன் 256 GB அடிப்படை வேரியண்ட்டின் விலை ரூ.1,20,999 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வழக்கமான ஐபோன் 17 மற்றும் ப்ரோ மாடல்களுக்கு இடையில் இருக்கும். உலக சந்தைகளுடன் ஒப்பிடும்போது, இந்த விலை இந்தியாவில் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மதிப்பை வழங்குமா? என்ற விவாதம் தற்போது தொழில்நுட்ப ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Iphone

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: