/tamil-ie/media/media_files/uploads/2022/05/apple.jpg)
இந்தியாவின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-In), ஆப்பிள் பயனர்களுக்கு ஒரே வாரத்தில் 2 எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
CERT-In வெளியிட்ட முதல் எச்சரிக்கை அறிவிப்பில், உங்கள் Safari பிரவுசரில் 15.4 க்கு முந்தைய பதிப்பை இயக்கினால், உங்கள் சாதனத்தை உடனடியாக அப்டேட் செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது. முந்தைய Safari பதிப்புகளில் ஹேக்கர்களால் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், CERT-In வெளியிட்ட 2 ஆவது அறிக்கையில், ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் டிவி, மேக் புக் ஆகியவற்றுக்கும் ஆபத்து என குறிப்பிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சாதனங்களில் தன்னிச்சையான குறியீட்டை இயக்க ஹேக்கரை அனுமதிக்கிறது. தற்போது பயன்பாட்டில் உள்ள ஆப்பிள் வாட்ச்கள், டிவிகள் மற்றும் மேக்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, ஒரு ஹேக்கர் மில்லியன் கணக்கான சாதனங்களை அணுகலாம்.
இதையறிந்த ஆப்பிள் நிறுவனம், இரண்டு பாதிப்புகளுக்கும் பேட்ச்களை வெளியிட்டுள்ளது. இதனை தற்போதைய அப்டேட்-வுடன் சேர்த்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
ஹேக்கர்களால் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க, மூன்று சாதனங்களை பயன்படுத்துவோரும், உடனடியாக சாப்ட்வேர் அப்டேட் செய்ய வேண்டும். இல்லையெனில், ஹேக்கர்கள் உள்ளே நுழைந்து, டேட்டாவை திருடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.