/tamil-ie/media/media_files/uploads/2022/09/New-Project35.jpg)
ஆப்பிள் வாட்ச் ஒரு முதியவரின் உயிரைக் காப்பாற்றியுள்ளது. இதுபற்றி நாம் முன்னர் கூட கேள்விப்பட்டிருப்போம். அதேபோல் மீண்டும் ஒரு நிகழ்வு இங்கிலாந்தில் நடந்துள்ளது. ஸ்மார்ட்வாட்ச்சில் இருக்கும் ஈசிஜி சென்சார் முதியவரின் இதயத் துடிப்பு குறைவதைக் கண்டறிந்து எச்சரிக்கை செய்து அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளது.
ஒரு முறை அல்லது இரு முறை அல்ல, 3,000 முறைக்கு மேல் காப்பாற்றியுள்ளது. ஈசிஜி இதய சென்சார் கிட்டத்தட்ட 3,000 முறை குறைந்த இதயத் துடிப்புக்கான எச்சரிக்கைகளை அனுப்பி அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளது.
முதியவர் டேவிட் லாஸ்ட் கூறுகையில், "இந்த வாட்ச் என் மனைவி எனக்கு பரிசாக கொடுத்தது. வாட்சிலிருந்து பல முறை எச்சரிக்கைகள் வந்த பிறகு, மருத்துவமனை செல்ல முடிவு செய்தோம். பல மருத்துவ பரிசோதனைகள் செய்ய பிறகு வந்த ரிப்போர்ட் எனக்கு அதிர்ச்சியளித்தது. எனக்கு இதயப் பிரச்சனை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது" என்றார்.
அறிக்கை கூறுகையில், முதியவரின் இதயத் துடிப்பு நிமிடத்திற்கு 30க்கும் கீழ் குறைந்துள்ளது. ஆப்பிள் வாட்ச் ஈசிஜி சென்சார் மூலம் கண்டறிந்து எச்சரிக்கை செய்துள்ளது. சாதாரணமாக இதயத் துடிப்பு நிமிடத்திற்கு 60-100 இருக்க வேண்டும். 48 மணி நேரத்தில் 10 வினாடிகளில் 138 முறை அவரது இதயத் துடிப்பு குறைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.
முதியவரை பரிசோதித்த மருத்துவர்கள் இதய அடைப்பு இருப்பதாகவும் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளனர். பின், முதியவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். உரிய நேரத்தில் எச்சரிக்கை கொடுத்து தனது உயிரைக் காப்பாற்றியதற்காக ஆப்பிள் வாட்ச் (ஆப்பிள் நிறுவனம்) பாராட்டு தெரிவித்தார். ஆப்பிள் வாட்ச் கண்டுபிடிப்பிற்கு நெகிழ்ச்சி தெரிவித்தார்.
ஆப்பிள் வாட்ச் உயிர்களைக் காப்பாற்றுவது இது முதல் முறை அல்ல. ஆப்பிள் வாட்ச் பயன்படுத்துபவர்களின் பிபி (High/slow BP or heart rate) இதயத் துடிப்புயை கண்டறிந்து எச்சரிக்கை கொடுக்கிறது. இந்தநிலையில், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8, வாட்ச் எஸ்இ 2 மற்றும் ஆப்பிள் வாட்ச் ப்ரோ உள்ளிட்ட புதிய ஆப்பிள் வாட்ச்களை நிறுவனம் இந்த வாரம் அறிமுகப்படுத்த உள்ளது. அனைத்து வாட்ச்களும் உடல் ஆரோக்கியம் சார்ந்த அம்சங்களை கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.