ஆப்பிள் வாட்ச் ஈசிஜி ஆபத்தினை முன்கூட்டியே கூறும்... ஆனால் மருத்துவரின் முடிவே இறுதியானது - FDA

ஈசிஜி அப்பிளிகேஷன் - ஒவர் தி கவுண்ட்டர் பயன்பாட்டிற்கு மட்டுமே - FDA Clearance

நேற்று முன்தினம் (12/09/2018) ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய ஐபோன்களை அறிமுகம் செய்தது. அப்போது ஆப்பிள் வாட்ச் சீரியஸ் 4 வெளியிட்டது அந்நிறுவனம்.

ஆப்பிள் வாட்ச் சீரியஸ் 4 – ஈசிஜி குறித்து எஃப்.டி.ஏ

இதுவரை வெளியான ஸ்மார்ட் வாட்ச்களில் எதிலும் ஈ.சி.ஜி பொருத்தப்பட்டதில்லை. ஆனால் ஆப்பிள் வாட்ச் சீரியஸ் 4ல் முதன்முறையாக இந்த சிறப்பம்சத்தை பயன்படுத்தியிருக்கிறது ஆப்பிள் நிறுவனம்.

மருத்துவமனையில் எப்படி ஒரு எலக்ட்ரோ கார்டியோகிராம் செயல்படுமோ அப்படியாகவே இந்த வாட்ச்சும் செயல்படுகிறது. வாட்சில் இருக்கும் டிஜிட்டல் க்ரவுனில் ஒரு விரலை வைத்தால் நம் இதயத்தின் இயக்கம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள இயலும்.

அதே போல் புதிதாக வெளியாகியுள்ள இந்த வாட்ச்சில் ஹார்ட் – ரேட் சென்சாரும் பொருத்தப்பட்டிருக்கிறது. அது இதயத்தின் துடிப்புகளை துல்லியமாக கணக்கிடும். அதில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் உடனே பயனாளிக்கு தெரிவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

எஃப்.டி.ஏ எனப்படும் ஃபுட் அண்ட் ட்ரக் அமைப்பில் கிளியரன்ஸ் பெற்றபின்பே இந்த வாட்ச்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஈ.சி.ஜி என்பது மிகவும் முக்கியமான சிறப்பம்சம் என்பதால் பலதரப்பட்ட டெஸ்ட்டுகளுக்கு ஆளாக்கப்பட்ட பின்னரே விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

FDA க்ளியரன்ஸ்

மேலும் ஈசிஜி அப்பிளிகேஷன் – ஒவர் தி கவுண்ட்டர் பயன்பாட்டிற்கு மட்டுமே FDA க்ளியரன்ஸ் கொடுத்திருக்கிறது எனவும், தகவல் தேவைக்காக மட்டுமே இந்த அப்பிளிகேஷனை பயன்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

ஏற்கனவே இருதயக் கோளாறு இருப்பவர்கள் தங்களின் இதயத்தின் செயல்பாட்டினை தெரிந்து கொள்ள இந்த ஈசிஜி பொருத்தப்பட்ட வாட்ச்சினை பயன்படுத்த வேண்டும் என்று ஆதரவு அளிக்கவில்லை. ஆனால் ஆரோக்கியமாக இருப்பவர்கள் தங்களின் இதயத்தின் செயல்பாட்டினை தெரிந்துகொள்ள வேண்டுமானால் இந்த வாட்ச்சினை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறது FDA.

வாடிக்கையாளர்கள் யாரும் வெறும் வாட்சினை வைத்து தங்களின் இதயத்தின் செயல்பாட்டினை தெரிந்து கொள்வதற்கு பதிலாக நல்ல மருத்துவரை அணுகுவது சிறப்பானது என்று கூறியிருக்கிறது FDA.

மருத்துவர் எடுக்கும் முடிவே இறுதியானது. ஆப்பிள் வாட்ச் வரப்போகும் ஆபத்தினை மட்டுமே முன்கூட்டியே சொல்லுமே தவிர நோய் குறித்த குறிப்புகளை மருத்துவர்கள் மற்றுமே அறிவிப்பார்கள் என்று கூறியிருக்கிறது FDA.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close