Advertisment

ரத்த ஆக்சிஜன் அளவைக் குறிக்கும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 அறிமுகம்

Apple Watch Series 6 ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 பல அம்சங்களைக் கொண்டிருந்தாலும், எதனை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதில் குபேர்டினோ தெளிவாக இருந்தார்.

author-image
WebDesk
New Update
ரத்த ஆக்சிஜன் அளவைக் குறிக்கும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 அறிமுகம்

Apple Tamil News: ஆப்பிள் நிறுவன நிகழ்வு: அனைத்து சிறப்பு அம்சங்கள் மற்றும் பெரிய ஸ்க்ரீன் கொண்ட மிகவும் மலிவு விலை மாடல் ஆப்பிள் வாட்ச்SE. ஆனால், பழைய ப்ராசசர் கொண்ட பாதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment
Nandagopal Rajan : இது வழக்கமான ஆப்பிள் நிறுவன நிகழ்வு இல்லை என்பது அதன் முதல் முகப்பிலேயே தெளிவாகத் தெரிந்தது. தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டர் மேடையில் இல்லாதது அனைவரின் எதிர்பார்ப்புகளுக்கும் எதிர்மறையாக அமைந்தது. அவர், ஆப்பிள் பார்க் தலைமையகத்தில் கீழ்நோக்கி இருந்தபடி வளைந்த கண்ணாடி பேனல்களாலான வட்ட நடைபாதையிலிருந்து கேமரா வழியே பேசினார். சில நொடிகளைக் கடந்து, குக் ஆப்பிள் வாட்ச் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். ஆம், இது முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆப்பிள் நிகழ்வு.

ஆப்பிள் வாட்ச் மீது நாம் கவனம் செலுத்துவது தற்போது நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் காலத்தின் அடையாளமாக என்றுமே இருக்கும். ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 பல அசத்தலான அம்சங்களைக் கொண்டிருந்தாலும், முதலில் எதனை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதில் குபேர்டினோ (Cupertino) தெளிவாக இருந்தார். இந்த கோவிட்-19 நோய்த்தொற்று காலகட்டத்தில் மிகவும் முக்கிய காரணி காட்டியாக விளங்கும் ரத்தத்தின் ஆக்சிஜன் அளவை இந்த ஸ்மார்ட் வாட்ச்சில் சரிபார்த்துக்கொள்ளலாம். நம் உடலில் ரத்தத்தின் ஆக்சிஜன் அளவு குறையும்போது கைகளில் அணிந்திருக்கும் இந்த ஸ்மார்ட் டைம்பீஸ் எச்சரிக்கை செய்யும் விதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சமீபத்திய S6 சிப்பால் (Chip) இயக்கப்படும் இந்த புதிய பதிப்பு ($399), பெரும்பாலானவர்களால் எதிர்பார்க்கப்பட்ட தூக்கத்தைக் கண்காணிக்கும் அம்சத்துடனும் வரவிருக்கிறது.

ஆப்பிள் வாட்ச் SE, இதே போன்ற அம்சங்கள் மற்றும் பெரிய திரை கொண்ட மிகவும் மலிவு விலை மாடல். ஆனால், அதன் ப்ராசசர் தற்போதைய பதிப்பிற்கும் முன்னாள் உள்ள மாடல். ஏற்கெனவே, உலகின் மிகவும் பிரபலமான பிராண்டாக இருக்கும் ஆப்பிள், பாரம்பரிய வாட்ச் தயாரிப்பாளர்களுக்கும் ஃபிட்பிட் (Fitbit) போன்ற பிற ஸ்மார்ட்வாட்ச் நிறுவனங்களுக்கும் கடினமான நேரத்தையே அதன் 279 டாலர் விலையுடனான வாட்ச் கொடுக்கிறது.

ஃபிட்பிட் பற்றிச் சிந்திக்க வேண்டியது அதிகம்: ஆரோக்கியத்தின் மீது அதிகம் கவனம் செலுத்துபவர்களுக்கு ஆப்பிள் வாட்ச் ஃபிட்னெஸ் தெளிவாகப் பயிற்றுவிக்கும் விதமாக இருந்தது. இது ஆப்பிளின் சந்தா சேவைகளுக்கு மற்றொரு சேவையையும் சேர்க்கும் விதமாக இருந்தது. iCloud முதல் ஆர்கேட், மியூசிக் மற்றும் டிவி வரை அனைத்தையும் மாதாந்திர கட்டணத்தில் தொகுத்து ஆப்பிள் பயனர்களுக்கான புதிய ஒருங்கிணைந்த சந்தா சேவையான Apple One-ற்கு அதிக மதிப்பைச் சேர்க்கிறது. கடந்த சில ஆண்டுகளாக ஆப்பிள் நிறுவனம் சேவைகளை நோக்கி நகர்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. மேலும், இந்த புதிய தொகுப்பு ஒப்பந்தம் ஆப்பிளின் சேவை சலுகைகளை ஒருங்கிணைக்கும் வண்ணமாக இருக்கும்.

இறுதியாக தன் பெரிய அறிவிப்பை அறிவித்தது ஆப்பிள் : iPad Pro மற்றும் 10.9 அங்குல லிக்விட் ரெட்டினா (Liquid Retina) திரை உள்ளிட்டத் தோற்றங்களைக் கொண்ட புத்தம் புதிய iPad Air பற்றிய தகவல்தான் அது. இந்த iPad Air-ல், புதிய ப்ராசசர், தொழில்துறையின் முதல் 5 நானோமீட்டர் A14 பயோனிக் ப்ராசசர் போன்றவை பொருத்தப்பட்டுள்ளன. இதுவரை உருவாக்கிய சிப் வகைகளில் இதில் உபயோகிக்கப்பட்டதுதான் “மிகவும் மேம்படுத்தப்பட்ட சிப்”.

இங்குப் பழைய A12 பயோனிக் ப்ராசசர் கொண்ட iPad 8th Gen ($299) இருந்தது. ஆனாலும், "மிகவும் சக்திவாய்ந்த விண்டோஸ் லேப்டாப்பை விட இரண்டு மடங்கு வேகமாக" இருப்பதாக ஆப்பிள் நிறுவனம் கூறுகிறது.

மேலும், பெரும்பாலான விண்டோஸ் லேப்டாப்களைவிட கேமிங், கிராபிக்ஸ் மற்றும் வீடியோ திறன்களில் iPad எவ்வாறு சிறந்தது என்பதையும் தெளிவாக விளக்கியது. iPad பிரிவை வளர்ப்பதற்கு மலிவு விலை லேப்டாப் பிரிவை நோக்கி ஆப்பிள் நிறுவனம் நகர்கிறது. மேலும், புதிய iPad Air-ல் உள்ள மேஜிக் கீபோர்டு, அதனை வெற்றிகரமாகவே செயல்படுத்தும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற

t.me/ietamil"

Apple
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment