/indian-express-tamil/media/media_files/2025/03/24/sI1gEBZiO37v9nDzvKR4.jpg)
2015-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து ஆப்பிள் வாட்ச் மீதான மோகம் வாடிக்கையாளர்களுக்கு குறையவே இல்லை என சொல்லலாம். அந்தளவிற்கு மிகவும் பிரபலமான ஸ்மார்ட்வாட்ச் ஆகும். ஆப்பிள் நிறுவனம் தற்போது டிஸ்ப்ளே-வுக்குள் கேமரா மற்றும் விஷுவல் இண்டெலிஜன்ஸ் உடன் வாட்ச் (கைக்கடிகாரம்) ஒன்றை உருவாக்கி வருவதாகவும் அடுத்த 2 ஆண்டுகளில் சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படும் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கேமராவுடன் கூடிய ஆப்பிள் வாட்ச் "வெளி உலகை ரசிக்கவும், அதில் உள்ள ஏ.ஐ. பொருத்தமான தகவல்களை வழங்க பயன்படுத்தவும்" முடியும் எனக் கூறப்படுகிறது. ஐபோன்களில் மட்டுமே உள்ள விஷுவல் இன்டெலிஜென்ஸை வாட்ச்களுக்கும் ஆப்பிள் நிறுவனம் விரிவுபடுத்த உள்ளது. வரவிருக்கும் ஆப்பிள் வாட்ச் மற்றும் ஏர்பாட்ஸ், ஆப்பிள் இண்டெலிஜன்ஸ் ஐபோனுடன் இணைக்கப்படும்போது, புதிய ஆப்பிள் இண்டெலிஜன்ஸ் அனுபவத்தை வழங்க முடியும்.
கேமரா, விஷுவல் இன்டெலிஜென்ஸ் கொண்ட ஆப்பிள் வாட்சை விரைவில் எதிர்பார்க்க வேண்டாம், இந்த அம்சங்கள் 2027-ம் ஆண்டுக்குள் மட்டுமே வரும் எனக் கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் சில ஏ.ஐ. அம்சங்களை வழங்குவதில் பின்னடைவுகளைச் சந்தித்துள்ளது. குறிப்பாக மாற்றியமைக்கப்பட்ட மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட Siri. நிறுவனம் அதன் தலைமைக் குழுவை மாற்றியமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் மற்றொரு Bloomberg அறிக்கை, 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் எதிர்பார்க்கப்படும் குறைந்தபட்சம் iOS 20 வரை புதுப்பிக்கப்பட்ட Siri வராமல் போகலாம் என்று கூறுகிறது . மேலும், Apple முழு தனிப்பயனாக்கப்பட்ட Siri அனுபவத்தையும் புதிதாக உருவாக்கி வருவதாகவும் Bloomberg தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.