Apple’s iPhone XI 2019 : ஒரு வருடம் பிறந்துவிட்டால், டெக் பிரியர்களின் அடுத்த கேள்வி இந்த வருடத்திற்கு ஆப்பிள் நிறுவனம் எந்தெந்த போன்களை, டிவைஸ்களை அறிமுகம் செய்கிறது என்பது தான்.
இந்த வருடம் ஆப்பிளின் XI வெளியாக இருப்பதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்த வருடம் வர இருக்கும் ஆப்பிள் iPhone XI சிறப்பம்சங்கள் என்னவாக இருக்கும் என்றும் கேட்ஜெட் ப்ரியர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.
Apple’s iPhone XI 2019 சிறப்பம்சங்கள்
இதுவரை வெளியான தகவல்களின் படி மூன்று பின்பக்க கேமராக்கள், 3டி சென்சார்களுடன் வெளியாக இருக்கிறது இந்த போன். ஏற்கனவே சாம்சங் மூன்று மற்றும் நான்கு கேமராக்களை கொண்ட போன்களை ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளன. ஹூவாய் நிறுவனத்தின் மேட் 20 போன்களும் 3 கேமராக்களை கொண்டுள்ளது.
தற்போது வெளியாகியிருக்கும் தகவல்களின் படி பிக் ஸ்க்ரீன் வேரியண்ட்டில் 6.5 இன்ச் அளவு கொண்ட போன்களும், 5.8 இன்ச் டிஸ்ப்ளே இரண்டு கேமராக்கள் கொண்ட போன்களும் வெளிவரவுள்ளது. 2019ல் வெளியாக இருக்கும் இந்த போனின் கேமராக்களின் சென்சார்கள் சோனியின் டைம் ஆஃப் ப்ளைட் சென்சார்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : சாம்சங்கின் புதிய போன் என்ன ? 5ஜி தொழில்நுட்பத்துடன் வெளியாகும் சாம்சங் கேலக்ஸி S10…