/tamil-ie/media/media_files/uploads/2019/04/WF2oNJ87mzPnQYV4aB6Lzj-970-80.jpg)
Apple's Two New AirPod 3 Models
Apple's Two New AirPod 3 Models : இந்த மாதத்தின் ஆரம்பத்தில் வெளியானது ஏர்பாட் 2. அது நாய்ஸ் கேன்சலேசன் (noise cancellation) சிறப்பம்சங்களுடன் வெளியாகும் என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில், ஏர்பாட் 3-ல் மட்டுமே அந்த சிறப்பம்சங்கள் வரும் என்று கூறிவிட்டது ஆப்பிள் நிறுவனம்.
ஏர்பாட் 3ல் 2 மாடல்கள் இந்த வருடம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வடிவம் மற்றும் விலையில் எந்த வித மாற்றமும் இல்லாமல் அப்படியே தொடரும் என்றும், சிறிய அளவிலேயே தொழில்நுப்ட மாற்றம் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஏர்பாட் 2 வின் விலை
ஏர்பாட்ஸ் 2 (வையர்லஸ் சார்ஜிங் கேஸுடன்) விலை 199 டாலராக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சாதாரண ஏர்பாட்ஸ் டிவைஸின் விலை 159 டாலர்கள்.
புதிதாக வர இருக்கும் மாடலில் எதிர்பார்க்கப்பட வேண்டிய சிறப்பம்சங்கள் என்னென்ன?
கருப்பு நிற வேரியண்ட், ப்ள்ட்-இன் ஹெல்த் மானிட்டர், மற்றும் நாய்ஸ் கேன்சலுடன் ஏர்பாட்ஸ் 2 வெளியாகும் என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில் அப்படி சிறப்பம்சங்கள் ஏதும் வெளியாகவில்லை. ஆனால் அடுத்த மாடலில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் வையர்கள் எதுவும் இல்லாமல் ஏர்பாட்கள் வெளியாகும் என்பதை திட்டவட்டமாக கூறியுள்ளது ஆப்பிள் நிறுவனமும், கவுண்ட்டர் பாயிண்ட்டும்.
ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ஏர்பாட் 1 2016ம் ஆண்டு வெளியானது. மூன்றாண்டுகள் கழித்து இந்த வருடம் வெளியானது. ஏர்பாட் 3 இந்த வருடம் இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க : 5000mAh பேட்டரி செயல்திறன் கொண்ட போன்களின் பட்டியலில் இணைந்த விவோ!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.