/indian-express-tamil/media/media_files/2025/10/01/arattai-vs-whatsapp-2025-10-01-13-39-55.jpg)
'எது பெருசுன்னு அடிச்சு காட்டு'... வாட்ஸ்அப் VS அரட்டை; என்னென்ன ஸ்பெஷல், எது பெஸ்ட்?
இந்தியாவில் வாட்ஸ்அப்பிற்குப் போட்டியாக, ஜோஹோ (Zoho) நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 'அரட்டை' (Arattai) ஆஃப் களமிறங்கியுள்ளது. 2021-லேயே அறிமுகப்படுத்தப்பட்டாலும், அண்மையில்தான் மத்திய அரசின் ஆதரவு, சமூக ஊடகங்களில் ஏற்பட்ட பரபரப்பு, 'மேட் இன் இந்தியா' அந்தஸ்து ஆகியவற்றின் காரணமாக இந்த ஆஃப் அதிக பிரபலமடைந்துள்ளது. கூகுள் பிளேஸ்டோர், ஆப்பிள் ஆப் ஸ்டோரில் பயனர்களின் பதிவுகள் மற்றும் டிராஃபிக் 100 மடங்கு அதிகரித்திருப்பதால், இது மெட்டாவின் வாட்ஸ்அப் (WhatsApp) தளத்துக்குப் பெரும் சவாலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரட்டை மற்றும் வாட்ஸ்அப் ஆகிய இரண்டும் ப்ரண்ட்ஸ் மற்றும் தொழில்முறை நபர்களுடன் இணைவதற்கான தளங்களை வழங்கினாலும், அம்சங்கள் மற்றும் பிரைவசி குறித்த ஆபர்களில் சில வேறுபாடுகள் உள்ளன. இந்த 2 ஆஃப்களும் என்ன வழங்குகின்றன, வாட்ஸ்அப்பிலிருந்து 'அரட்டை' எவ்வாறு வேறுபடுகிறது என்பதைப் பார்க்கலாம்.
'அரட்டை' எவ்வாறு வாட்ஸ்அப்பிலிருந்து வேறுபடுகிறது?
சாட்டிங், மீடியா பைல்களைப் பகிர்தல், வாய்ஸ் நோட் அனுப்புதல், வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதி போன்ற அடிப்படை மெசேஜிங் அம்சங்களை 2 ஆஃப்களும் கொண்டிருந்தாலும், 'அரட்டை' சில கூடுதல் அம்சங்களுடன் அதன் பயன்பாட்டு எல்லையை விரிவுபடுத்துகிறது.
மல்டி-டிவைஸ் அணுகல் (Multi-Device Access): வாட்ஸ்அப் தற்போது ஆதரிக்காத ஆண்ட்ராய்டு டிவிகள் உட்பட பல சாதனங்களில் அரட்டை ஆப் அணுகலை வழங்குகிறது. பயனர்கள் தங்கள் அரட்டை அக்கவுண்ட்டை ஒரே நேரத்தில் 5 சாதனங்களில் பயன்படுத்த முடியும்.
சேனல்கள் மற்றும் ஸ்டோரிகள்: வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மற்றும் சேனல்களைப் போலவே, அரட்டை ஆப்பும் ஸ்டோரிகள் மற்றும் ஒளிபரப்பு பாணியிலான சேனல் (Channels) வசதியை வழங்குகிறது.
'பாக்கெட்' அம்சம் (Pocket Feature): அரட்டை ஆஃப்பில் "பாக்கெட்" என்ற பிரத்யேக 'செல்ஃப்-சாட்' வசதி உள்ளது. இதில் பயனர்கள் தங்கள் புகைப் படங்கள், வீடியோக்கள், குறிப்புகள், ரிமைண்டர்ஸ் மற்றும் பிற பைல்களைத் தனிப்பட்ட பயன்பாட்டுக்காகச் சேமித்து வைக்கலாம். இதுதவிர, வீடியோ மீட்டிங் அட்டவணைப்படுத்த பிரத்யேக "மீட்டிங்ஸ்" டேப் உள்ளது. (வாட்ஸ்அப்பில் 'You' என்ற சாட் விண்டோ இருந்தாலும், இந்த மீட்டிங் வசதி இல்லை.)
அணுகல்தன்மை (Accessibility): அரட்டை ஆஃப் ஆனது, குறைந்த ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன்கள், பழைய 2G/3G நெட்வொர்க்குகளிலும் கூட செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கிராமப்புற பயனர்களுக்கும் குறைந்த பட்ஜெட் சாதனங்களைக் கொண்டவர்களுக்கும் எளிதாகப் பயன்படுத்த உதவுகிறது. வாட்ஸ்அப் ஒப்பீட்டளவில் அதிக டேட்டா மற்றும் சிஸ்டம் வளங்களைப் பயன்படுத்துகிறது.
விளம்பரம், பிரைவசி பற்றி ஜோஹோ சொல்வது என்ன?
அரட்டை ஆஃப் முற்றிலும் இலவசம். இது ஜோஹோவால் உருவாக்கப்பட்ட இலவச, க்ராஸ்-பிளாட்ஃபார்ம் செயலியாகும். மேலும், விளம்பரங்கள் இருக்காது என்றும் ஜோஹோ உறுதியளிக்கிறது. மெட்டாவின் உத்திக்கு மாறாக, அரட்டை ஆப் பயனர்களின் தனிப்பட்ட தரவுகளை இலக்கு வைக்கப்பட்ட விளம்பரங்களுக்குப் பயன்படுத்தாது என்றும் நிறுவனம் உறுதி அளித்துள்ளது. அரட்டை ஆஃப் ஒருவருக்கொருவர் பேசும் சாட்கள் (one-to-one chats), குழு சாட் (group chats) இரண்டையும் ஆதரிக்கிறது. இதில் குழுக்களின் அதிகபட்சமாக 1,000 உறுப்பினர்களை சேர்க்க முடியும். (வாட்ஸ்அப்பின் அதிகபட்ச வரம்பு 1,024 ஆக உள்ளது).
வாட்ஸ்அப் VS அரட்டை எவ்வளவு பாதுகாப்பானது?
அரட்டை மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றுக்கு இடையேயான பாதுகாப்பில் உள்ள முக்கிய வேறுபாடு எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் (E2EE) வசதியைச் சார்ந்தது. வாட்ஸ்அப் சாட்கள், கால்ஸ் மற்றும் பகிரப்பட்ட பைல்ஸ் உள்ளிட்ட அனைத்து வகையான தகவல்தொடர்புகளுக்கும் முழு E2EE-ஐப் பயன்படுத்துகிறது.
அரட்டை: தற்போது வாய்ஸ் மற்றும் வீடியோ கால்களுக்கு மட்டுமே முழு E2EE-ஐ வழங்குகிறது. டெக்ஸ்ட் மெசேஜ் என்க்ரிப்ஷன் இன்னும் முழுமையாகச் செயல்படுத்தப்படவில்லை; எனினும், வரவிருக்கும் அப்டேட்களில் இந்த பாதுகாப்பை விரிவுபடுத்த ஜோஹோ நிறுவனம் உறுதியளித்துள்ளது.
ஆண்ட்ராய்டு மற்றும் iOS-ல் கிடைக்குமா?
ஆம். ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்கள் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அரட்டை ஆப்பை இலவசமாகப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். வாட்ஸ்அப்புக்கு சவாலாக வந்துள்ள இந்த 'மேட் இன் இந்தியா' அரட்டை ஆப் உங்கள் கவனத்தை ஈர்க்கிறதா? நீங்கள் இதைப் பயன்படுத்திப் பார்க்கத் தயாரா?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.