/tamil-ie/media/media_files/uploads/2023/03/GPT-4-3.jpg)
GPT-4
ChatGPT என்ற வார்த்தை சமீப நாட்களில் அதிகம் பயன்படுத்தி வருகிறோம். அது பற்றி உலகம் முழுவதும் பல விவாதங்கள் எழுந்துள்ளது. கல்வி முதல் தொழில் வரை அத்தனை துறைகளிலும் இதன் பயன்பாடு உள்ளது. கிட்டதட்ட மனிதனின் அத்தனை வேலைகளையும் AI செய்யக் கூடியது. தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. ChatGPT என்ற செயற்கை நுண்ணறிவு அனைத்து வேலைகளையும் பள்ளி, கல்லூரிக்கான கட்டுரை எழுதுவது, ஐடி துறையில் கோடிங் செயல்படுத்துவது, விளையாட்டு என அனைத்து துறைகளிலும் அறிவு செலுத்தப்பட்டுள்ளது. இதனால் பல துறைகளில் வேலை வாய்ப்புகள் பறிபோகும் அச்சம் எழுந்துள்ளது.
GPT-4 LLM பதிப்பு முன்னெப்போதையும் விட மிகவும் ஆக்கப்பூர்வமாகவும் ஒத்துழைப்பாகவும் உள்ளது என்று இதன் தயாரிப்பு நிறுவனமான OpenAI கூறியுள்ளது. இனி வரும் காலத்தில் கிட்டதட்ட 20 துறைகளுக்கு ஏ.ஐ முறையில் வேலைகள் வழங்கப்படும் என்றும் மனிதர்களுக்கு வேலை வாய்ப்பு பறிபோகும் அச்சம் இருப்பதாகவும் GPT-4 கூறியுள்ளது.
Data Entry Clerk
Customer Service Representative
Proofreader
Paralegal
Bookkeeper
Translator
Copywriter
Market Research Analyst
Social Media Manager
Appointment Scheduler
Telemarketer
Virtual Assistant
Transcriptionist
News Reporter
Travel Agent
Tutor
Technical Support Analyst
Email marketer
Content Moderator
20 jobs that GPT-4 will replace, written by GPT-4: pic.twitter.com/MTcLHCidzH
— Rowan Cheung (@rowancheung) March 15, 2023
மனிதர்களால் செய்யப்பட்டு வரும் இந்த வேலைகள் செயற்கை நுண்ணறிவு முறையில் மாற்றியமைக்கப்படும் எனக் கூறப்படுகிறது. ஏ.ஐ பயன்படுத்தப்பட்டால் பொருட் செலவு, ஊழியர்களுக்கான செலவு, நேரக் குறைவு என பலன்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இது எவ்வளவு தூரம் சரியாக, நிலையாக வேலை செய்யும் என்று கூற முடியாது. இதன் முடிவுகள் தீவிரமாக எடுத்துக் கொள்ள முடியாது. GPT-4 மனித மொழிகளைப் பிரதிபலிக்கிறது, அதாவது மனிதன் ப்ரோகிராம் செய்து வைத்ததை வெளிபடுத்துகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.