ஆர்ட்டெமிஸ் 2 திட்டத்தில் பயன்படுத்தப்படும் ஓரியன் விண்கலத்தின் க்ரூ, சேவை தொகுதிகளை (Orion crew and service modules ) நாசா புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் ஒன்றாக இணைத்தாக அறிவித்தது. பல மாதங்களாக, ஓரியன் விண்கலத்தின் இந்த இரண்டு முக்கிய கூறுகளை இணைக்கும் பணியில் நாசாவின் பொறியாளர்கள் பணிபுரிந்தனர் என்றும் தெரிவித்தது.
நாசாவின் ஆர்ட்டெமிஸ் 2 திட்டத்தில் 4 விண்வெளி வீரர்கள் நிலவை சுற்றி பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்வர். 3 நாசா விண்வெளி வீரர்கள் மற்றும் ஒரு கனடா வீரர் இடம்பெற உள்ளார். நாசா வீரர்கள் ரீட் வைஸ்மேன், விக்டர் குளோவர் மற்றும் கிறிஸ்டினா கோச் மற்றும் கனடிய விண்வெளி ஏஜென்சி (சிஎஸ்ஏ) விண்வெளி வீரர் ஜெர்மி ஹேன்சன் ஆகியோர் ஆர்ட்டெமிஸ் 2 திட்டத்தில் நிலவைச் சுற்றி பயணம் செய்ய உள்ளனர்.
2 தொகுதிகளும் தற்போது ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. விண்வெளி நிறுவனம் முதல் முறையாக ஒருங்கிணைந்த இந்த க்ரூ, சேவை தொகுதிகளை மேம்படுத்த உள்ளனர். மேலும் ஓரியன் விண்கலம் முதலில் "பவர்-ஆன்" சோதனை செய்யப்படும். அதைத் தொடர்ந்து altitude chamber சோதனை செய்யப்படும். அந்த நேரத்தில், ஓரியன் ஆழமான இடத்தின் வெற்றிடத்திற்கு முடிந்தவரை நெருக்கமாக இருக்கும்.
முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆர்ட்டெமிஸ் 1 திட்டத்தில் எஸ்.எல்.எஸ் ராக்கெட் மூலம் ஆளில்லா ஓரியன் விண்கலம் அனுப்பி சோதனை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆர்ட்டெமிஸ் 1 முதல் crewed mission ஆகும். நாசா 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்ட்டெமிஸ் திட்டம் மூலம் மீண்டும் நிலவில் மனிதர்களை தரையிறக்க திட்டமிட்டுள்ளது.
ஆர்ட்டெமிஸ் 2 பயணத்தில் 4 விண்வெளி வீரர்கள் நிலவை சுற்றி வருவார்கள். 10 நாள் நாட்கள் நிலவை சுற்றி ஆய்வு செய்வார்கள். ஓரியன் விண்கலத்தின் தரம், திறன் மற்றும் ஓரியன் உயிர் ஆதரவு அமைப்புகளை நாசா ஆய்வு செய்யும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“