ஹெச்-1பி விசா கட்டண விவகாரம்: டிரம்ப் அரசின் முடிவால் பதற்றத்தில் அமேசான், கூகுள் ஊழியர்கள்!

அமெரிக்காவில் ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்கள் செப்.21-ம் தேதிக்கு முன் நாடு திரும்புமாறும், நாட்டில் உள்ளவர்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறும் அமேசான், கூகுள், மைக்ரோசாஃப்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை அறிவுறுத்தியுள்ளன.

அமெரிக்காவில் ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்கள் செப்.21-ம் தேதிக்கு முன் நாடு திரும்புமாறும், நாட்டில் உள்ளவர்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறும் அமேசான், கூகுள், மைக்ரோசாஃப்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை அறிவுறுத்தியுள்ளன.

author-image
WebDesk
New Update
Trump raises H-1B fees

ஹெச்-1பி விசா கட்டண விவகாரம்: டிரம்ப் அரசின் முடிவால் பதற்றத்தில் அமேசான், கூகுள் ஊழியர்கள்!

டிரம்ப் நிர்வாகம், புதிய அறிவிப்பின்படி, H-1B விசாக்களுக்கு $100,000 கட்டணத்தை அறிவித்துள்ளது. இதனால், வெளிநாடுகளில் பணிபுரியும் பல ஊழியர்களை முதலாளிகள் உடனடியாக அமெரிக்கா திரும்புமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களான அமேசான், கூகுள், மைக்ரோசாப்ட் ஆகியவற்றின் அறிக்கைகள் வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

Advertisment

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

இந்த அறிக்கைகளின்படி, வெளிநாடுகளில் பயணம் செய்து கொண்டிருக்கும் H-1B விசா ஊழியர்கள் அனைவரும் உடனடியாக செப்டம்பர் 21, நள்ளிரவு 12:00 மணி (GMT)க்குள் அமெரிக்கா திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அவசரமாக வெளியிடப்பட்டதற்கு நிறுவனங்கள் வருத்தம் தெரிவித்துள்ளன. மேலும், நிலைமைக்கு ஏற்ப கூடுதல் தகவல்கள் வழங்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளன. அதே சமயம், H-1B மற்றும் H-4 விசாவுடன் அமெரிக்காவில் இருக்கும் ஊழியர்கள் உடனடியாக வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு நிறுவனங்கள் கேட்டுக்கொண்டுள்ளன. இந்த புதிய கட்டண அறிவிப்பால், H-1B விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவிற்கு வெளியே சென்று விட்டால், திரும்பும்போது $100,000 கட்டணத்தைச் செலுத்த நேரிடும் என்று நிறுவனங்கள் அஞ்சுகின்றன.

இந்த விவகாரம் குறித்து வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் கரோலின் லெவிட் (Karoline Leavitt) எக்ஸ் தளத்தில் பதிவை வெளியிட்டு உள்ளார். H-1B விசா வைத்திருப்பவர்கள் மற்றும் நிறுவனங்கள் கவலைப்பட வேண்டாம் என்றும், அவர்கள் வழக்கம் போல் பயணம் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த புதிய கட்டணம் நுழைவுவாயிலில் வசூலிக்கப்படாது எனவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

கரோலின் லெவிட் கூற்றுப்படி, இது ஆண்டுக்கு ஒருமுறை செலுத்தும் கட்டணம் அல்ல, இது விண்ணப்பத்தின்போது மட்டும் ஒருமுறை செலுத்தும் கட்டணம் ஆகும். தற்போது H-1B விசா வைத்திருப்பவர்கள், வெளிநாட்டில் இருந்தால், மீண்டும் அமெரிக்காவிற்குள் நுழையும்போது $100,000 கட்டணம் வசூலிக்கப்படாது.

Advertisment
Advertisements

இந்த திடீர் அறிவிப்பால், அவசரமாகத் திரும்ப முடியாத ஊழியர்களுக்குச் சவால்கள் இருக்கலாம் எனவும், தேவைப்பட்டால் உதவிகள் வழங்கப்படும் எனவும் நிறுவனங்கள் தங்கள் சுற்றறிக்கைகளில் குறிப்பிட்டுள்ளன. நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், கூடுதல் தகவல்கள் கிடைக்கும்போது உடனடியாகத் தெரிவிப்பதாகவும் உறுதியளித்துள்ளன.

அமேசான்: "H-1B விசா குறித்த குடியரசுத் தலைவரின் புதிய பிரகடனத்தை நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். செப்டம்பர் 21, 2025 அன்று அதிகாலை 12:01 மணிக்கு (EDT) இந்த பிரகடனம் அமலுக்கு வருகிறது. இதற்குப் பிறகு, H-1B விசா வைத்திருப்பவர்கள், தங்கள் விண்ணப்பத்துடன் $100,000 கூடுதல் கட்டணம் செலுத்தாமல் அமெரிக்காவிற்குள் நுழைய முடியாது.

நீங்கள் அமெரிக்காவில் இருந்தால் தற்போது பயணத் திட்டங்கள் இருந்தாலும், இப்போதைக்கு நாட்டிலேயே இருங்கள். கூடுதல் தகவல்களை நாங்கள் தொடர்ந்து வழங்குவோம்.

நீங்கள் வெளிநாட்டில் இருந்தால் முடிந்தால், நாளை நிர்ணயிக்கப்பட்ட கெடுவுக்குள் அமெரிக்காவிற்குத் திரும்புங்கள். இது அவசரமான அறிவிப்பு என்பதை நாங்கள் அறிவோம். இருந்தாலும், செப்டம்பர் 21, நள்ளிரவு 12:00 மணிக்கு (EDT) முன் அமெரிக்க சுங்கத் துறைக்குள் நுழைய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுங்கள்."

கூகுள்: "ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்களுக்கு அவசர அறிவிப்பு. புதிய பிரகடனம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12:01 மணிக்கு அமலுக்கு வர உள்ளது. இது மீண்டும் நுழைவதற்கான நடைமுறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தலாம். எனவே, சனிக்கிழமை இரவுக்குள் நாட்டிற்குத் திரும்ப வர முயற்சி செய்யுங்கள்."

மைக்ரோசாஃப்ட்: "முக்கிய அறிவிப்பு: H-1B விசா வைத்திருப்பவர்களுக்குப் புதிய பயணக் கட்டுப்பாடு. குடியரசுத் தலைவரின் பிரகடனத்தின்படி, செப்டம்பர் 21, 2025 அன்று அதிகாலை 12:01 மணி (ET) முதல், H-1B விசாவுடன் மீண்டும் அமெரிக்காவிற்குள் நுழைய, தங்கள் விண்ணப்பத்துடன் $100,000 கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

நீங்கள் வெளிநாட்டில் இருந்தால்: அடுத்த 28 மணி நேரத்திற்குள் அமெரிக்காவிற்குத் திரும்ப முயற்சி செய்யும் ஒவ்வொருவருக்கும் ஆதரவு மற்றும் வழிகாட்டுதலை வழங்க, நாங்கள் ஒரு படிவத்தை வெளியிடுவோம். இந்த பிரகடனம் மற்ற விசாக்களுக்குப் பொருந்தாது. மேலும், தற்போது அமெரிக்காவில் இருக்கும் H-1B விசா வைத்திருப்பவர்களின் நீட்டிப்பு அல்லது நிலை மாற்றங்களுக்கு இது உடனடியாகப் பாதிப்பை ஏற்படுத்தாது என்று கருதுகிறோம். கூடுதல் தகவல்கள் விரைவில் பகிரப்படும்." இந்த திடீர் அறிவிப்பு, ஆயிரக்கணக்கான வெளிநாட்டு ஊழியர்களிடையே பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Technology

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: