Asteroid 2018 PN22 : பூமியை நோக்கி எரிகல் ஒன்று நகர்ந்து வருகின்றது. Asteroid 2018 PN22 என பெயரிடப்பட்டிருக்கும் இந்த எரிகல் 0.055 முதல் 0.250 கி.மீ வரையிலான டையாமீட்டர் கொண்டுள்ளது. இது நாளை (ஆகஸ்ட் 17) பூமிக்கு மிக அருகில் பயணிக்கிறது. அதாவது ஒரு பள்ளிப் பேருந்து அளவில் இருக்கும் இந்த எரிகல் பூமிக்கு மிக அருகில் வருவதால் எந்த பாதிப்பும் இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
எரிகல் (Asteroid 2018 PN22)
இந்த எரிகல் சூரியனை சுற்றி வர 364 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. நாளை பூமிக்கு அருகில் 6.56 மில்லியன் கிலோ மீட்டருக்கு அருகில் பயணிக்க உள்ளது. தினமும் புவியைச் சுற்றி பல்லாயிர கணக்கான எரிகற்கள் பயணம் செய்து வருகின்றது. ஆனால் அதனால் எப்போதும் பூமிக்கு பாதிப்புகள் இல்லை.
மேலும் படிக்க : விண்வெளியில் வித்தை காட்டப் போகும் நாசா ஆராய்ச்சியாளர்கள்
ஒருவேளை பூமிக்கு மிக அருகில் அது பயணிக்கும் போது ஒரு சில நேரங்களில் பாதிப்பினை உருவாக்கலாம். அபோபிஸ் 99942 எனப்படும் இந்த வகை எரிகல்லினால் அடிக்கடி பூமிக்கு அச்சுறுத்தல் உருவாகியுள்ளது.
எரிகற்களின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து நாசா ஆராய்ச்சி செய்து வருகிறது. எரிகல் பெண்ணுவில் இருந்து சில முக்கியமான தகவல்களைப் பெறவும், சாம்பிள்களை எடுக்கவும் நான்கு இடங்களை தேர்வு செய்துள்ளது நாசா. OSIRIS-Rex ஸ்பேஸ்கிராஃப்ட் மூலமாக இந்த சாம்பிள்கள் பெறப்படும். 2020ம் ஆண்டு இந்த சாம்பிள்களை பெற முயற்சிகள் தொடங்கப்பட்டு அந்த சாம்பிள்கள் 2023ம் ஆண்டு இந்தியாவை வந்தடையும்.