Asteroid 2020 ND Passing Earth : "Asteroid 2020 ND” என்று பெயரிடப்பட்டுள்ள ஆபத்தான சிறுகோள் (asteroid) ஒன்று, இன்று (ஜூலை 24) பூமியைக் கடந்து செல்லும் என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான NASA எச்சரிக்கை விடுத்துள்ளது.
Asteroid 2020 ND சுமார் 170 மீட்டர் நீளம் கொண்டது என்றும் 48,000 கி.மீ வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது என்றும் NASA தெரிவித்துள்ளது.
பூமியைக் கடக்கும் ‘2020 என்.டி சிறுகோள்’ ஏன் அபாயகரமானது?
Asteroid 2020 ND பூமிக்கு சுமார் 0.034 வானியல் அலகுகள் (astronomical units) அதாவது சுமார் 5,086,328 கிலோமீட்டர் தூரம் வரை வரக்கூடும் என NASA எச்சரித்துள்ளது. மேலும், பூமியை நெருங்கும் தொலைவை வைத்து, இந்த சிறுகோள் 'potentially dangerous' என்று நாசா குறிப்பிட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Asteroid Passing Earth Updates: பூமியை கடக்கும் சிறுகோள்
PHA என வகைப்படுத்தப்பட்ட அனைத்து சிறுகோள்களும் பூமியை தாக்கும் என்று கருத தேவையில்லை. அச்சுறுத்தலுக்கான சாத்தியம் உள்ளது என்பதையே இது உணர்த்துகிறது. இத்தகைய சிறுகோள்களை கண்காணிப்பதன் மூலமும், அவற்றின் சுற்றுப்பாதைகளை அவ்வப்போது புதுப்பிப்பதன் மூலமும், நெருக்கமான அணுகுமுறை புள்ளிவிவரங்களையும் (close-approach statistics) அவற்றின் அச்சுறுத்தலையும் நாம் நன்கு கணிக்க முடியும், ”என்று நாசா கூறுகிறது.
பூமியில் இருந்து சுமார் 0.034 வானியல் அலகுகள் (அதாவது, 5,086,328 கிலோமீட்டர்) தொலைவில் கடந்து செல்வதால் “அபாயகரமான சிறுகோள்கள்” பிரிவின் கீழ் இது வகைப்படுத்தப்படுகிறது.
“பூமியை நெருங்கும் சிறுகோள்களின் மோதல் அபாயங்களை மதிப்பிடும் வகையில் அபாயகரமான சிறுகோள்கள் (PHA) வரையறுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, 0.05 au அல்லது அதற்கும் குறைந்தபட்ச சுற்றுப்பாதை வெட்டும் தூரம் (Minimum orbit intersection distance – MOID) கொண்ட அனைத்து சிறுகோள்களும் அபாயகரமானதாக கருதப்படுகின்றன” என்று நாசா சிறுகோள்களை வகைப்படுத்துகிறது.
நாசா இதுபோன்ற வானியல் பொருள்களை ‘பூமிக்கு அருகிலுள்ள பொருள்கள்’ (Near-Earth object -NEO) என வகைப்படுத்துகிறது. ஏனெனில் இத்தகைய பொருள்கள் மற்ற கிரகங்களின் ஈர்ப்பு விசைக்கு உந்தப்பட்டு, பூமியின் அருகாமையில் வருகின்றன.
எவ்வாறாயினும், PHA என வகைப்படுத்தப்பட்ட அனைத்து சிறுகோள்களும் பூமியை தாக்கும் என்று கருத தேவையில்லை. அச்சுறுத்தலுக்கான சாத்தியம் உள்ளது என்பதையே இது உணர்த்துகிறது. இத்தகைய சிறுகோள்களை கண்காணிப்பதன் மூலமும், அவற்றின் சுற்றுப்பாதைகளை அவ்வப்போது புதுப்பிப்பதன் மூலமும், நெருக்கமான அணுகுமுறை புள்ளிவிவரங்களையும் (close-approach statistics) அவற்றின் அச்சுறுத்தலையும் நாம் நன்கு கணிக்க முடியும், ”என்று நாசா கூறுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights