ஆஸ்ட்ராய்ட் 2006 QQ23 என்று அழைக்கப்படும் ஒரு விண்கல் பூமிக்கு மிக அருகில் ஆகஸ் 10ம் ட்தேதி பயணிக்க உள்ளது. அதன் மொத்த விட்டம் 569 மீட்டர்கள் ஆகும். பூமியின் 0.046 ஆஸ்ட்ரோனோமிக்கல் தூரம் வரை பயணிக்கும். அதாவது 7.4 மில்லியன் கிலோ மீட்டர் வரை அருகில் பயணிக்கும். 0.05 ஆஸ்டோரோனோமிக்கல் தூரம் வரை ஒரு எரிகல் பயணித்தால் அதனால் பெரிய பாதிப்புகள் இல்லை என்று ஆராய்ச்சியாளார்கள் கூறியின்றனர்.
நாசா விஞ்ஞானிகள் லிண்ட்லே ஜான்சன் மற்றும் கெல்லி ஃபாஸ்ட் இது ஒன்றும் ஆபாத்தான எரிகல் இல்லை என்று குறிப்பிடுகிறார். சாதாரண நாட்களில் பூமியின் சுற்றுவட்டப்பாதை மற்றும் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் எரிகற்கள் பயணிப்பது வழக்கம். மாதத்தின் பெரும்பாலான நாட்களில் இது நடைபெறும். இது போன்ற எரிகற்கள் பூமியை நோக்கி பயணிக்கின்றதா என்பது குறித்து ஒவ்வொரு ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது நாசா. ஒரு வருடத்தில் 6க்கும் மேற்பட்ட எரிகற்கள் இதே அளவிற்கு பூமியின் சுற்றுவட்டப்பாதையில் பயணிப்பது வழக்கமான ஒன்றாகும்.
விண்ணில் இருந்து பூமி எப்படி இருக்கும்? புகைப்படங்களை அனுப்பிய சந்திரயான்!
பூமிக்கு மிக அருகில் மட்டும் இதுவரையில் 900க்கும் மேற்பட்ட எரிகற்கள் வலம் வருகின்றன. அவை அனைத்தும் 1 கி.மீ வரையில் சுற்றளவு கொண்டவை. அதாவது இணந்த ஆஸ்ட்ராய்ட் 2006 க்யூ.க்யூ.3-ஐ விட அளவில் பெரியவை. ஆனால் கடந்த் 100 ஆண்டுகளில் மாபெரும் சேதத்தை ஏற்படுத்திய நிகழ்வுகள் என்று எதுவும் ரெக்கார்ட் ஆகவில்லை என நாசாவின் ஜே.பி.எல். செண்டர் கூறுகிறது.
714 வாய்ப்புகளில் ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே புவியில் பெரிய மாற்றத்தினை உருவாக்கும் என்றும் நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர். நாசா பென்னு என்ற ஒரு எரிக்கல்லை ஆய்ர்வு செய்து வருகிறது. 2700ல் ஒரே ஒரு வாய்ப்பு மட்டும் தான் அது பூமிக்கு சேதத்தை உருவாக்கும் என்றூம், அது 2175 மற்றும் 2195 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட தருணத்தில் தான் புவிக்கு மிக அருகில் பயணிக்கும் என்றும் நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இது தொடர்பான முழுமையான தகவலை ஆங்கிலத்தில் படிக்க
க்ராவிட்டி ட்ராக்டர் என்று அழைக்கப்படும் இந்த முக்கியமான காரணி தான், ஆஸ்ட்ராய்டின் பாதையை முற்றிலுமாக மாற்றுகிறது. இதன் மூலம் ஸ்பேஸ்கிராஃப்ட் மூலமாக விண்கற்களை பூமிக்கு அருகே பயணிக்கவிடாமல் தடுக்கவும் இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.