/indian-express-tamil/media/media_files/QLTzkJI555eISyNa0DNQ.jpg)
இந்த மாதம் தொடர்ச்சியான வானியல் நிகழ்வுகள் நடைபெற உள்ளள. ப்ளூ மூன் தொடங்கி பெர்சீட் விண்கல் மழை மற்றும் ஒரே நோட்கோட்டில் கோள்கள் இணையும் நிகழ்வு வரை இந்த மாதம் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளன. அவை எப்போது, எப்படி பார்ப்பது என்று தெரிந்து கொள்வோம்.
New moon, a blue moon, and a Lunar occultation of Saturn
நியூ மூன் அல்லது முதல் லூனார் பேஸ் எனப்படும் நிகழ்வு ஆகஸ்ட் 4 அன்று நிகழும். சந்திரனின் நிழல் பூமியை எதிர்கொள்வதால், நட்சத்திரங்கள், விண்மீன்கள் மற்றும் கிரகங்களைக் காண இருண்ட வானமாக இருக்கும், அதனால், இது நட்சத்திரத்தைப் பார்ப்பதற்கு சிறந்த நேரம். இந்த நிகழ்வு மாதத்திற்கு ஒரு முறை நடக்கும்.
அமாவாசை ஆகஸ்ட் 19-ம் தேதி முழு நிலவாக மாறும், மேலும் இது ஒரு ப்ளூ மூனாக இருக்கும், இது சூப்பர் மூன் என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கு ப்யூ மூன் எனப் பெயர் இருந்தபோதிலும், நிலவு ப்ளூ ஆக இருக்காது.பதிலாக அது பூமியின் சுற்றுப்பாதைக்கு அருகில் வரும்போது அது பெரிதாக இருக்கும்.
ஆகஸ்ட் 21 அன்று, மற்றொரு சந்திர நிகழ்வு, Saturn சந்திர மறைவு நடைபெறும். இந்த நிகழ்வின் போது, சந்திரன் சனிக்கு முன்னால் கடந்து செல்லும், லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் உள்ளவர்களின் பார்வையில் இருந்து நிலவு மறைக்கும்.
பெர்சீட் விண்கல் மழை
விண்கல் மழை ஒரு பொதுவான நிகழ்வாகும், மேலும் வானம் தெளிவாக இருந்தால் அதைப் பார்க்க உங்களுக்கு சிறப்பு உபகரணங்கள் தேவையில்லை. ஆகஸ்ட் 12 மற்றும் 13- க்கு இடையில், ஒரு மணி நேரத்திற்கு 100 விண்கற்களை வெளிப்படுத்தும் பெர்சீட் விண்கல் மழை உச்சம் பெறும்.
இந்த ஆண்டின் சிறந்த விண்கல் மழையாகக் கருதப்படும் பெர்சீட்ஸ், 109P/Swift-Tuttle வால் நட்சத்திரத்திலிருந்து உருவாகி வினாடிக்கு 59 கிமீ வேகத்தில் பயணிக்கிறது.
Three planetary conjunctions ( நோட்கோட்டில் கோள்கள் வருவது)
ஆகஸ்டில், வீனஸ் மற்றும் Mercury அல்லது Mars மற்றும் Jupiter ஒன்றாகக் காணும் வாய்ப்பு உங்களுக்கு இருக்கும். அதை விட சிறந்ததாக, ஆகஸ்ட் மாத இறுதியில், 6 கிரகங்கள் ஒரு நேர் கோட்டில் வரும் - இது ஒரு அரிய நிகழ்வாகும். இதை தவறவிடக் கூடாது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.