ஜூன் 19ல் வெளியாகும் ஆசூஸ் 6Z : சிறப்பம்சங்கள் என்னென்ன ?

ஆண்ட்ராய்ட் 9.0 பை இயங்கு தளத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட ZenUI 6 இயங்கு தளத்தில் இயங்குகிறது.

Asus 6Z Smartphone Price, specifications, launch
Asus 6Z Smartphone Price, specifications, launch

Asus 6Z Smartphone Price, specifications : தைவான் நாட்டு நிறுவனமான ஆசூஸ் தன்னுடைய ஜென்ஃபோன் 6-ஐ வருகின்ற ஜூன் 19ம் தேதி வெளியிடுகிறது.  இதற்கிடையில் இந்தியாவில் இருக்கும் ஜென் என்ற நிறுவனம் தங்களின் பெயரை கொண்டு இயங்கும் இந்த போன்களை வெளியிடக் கூடாது என்று வழக்கு தொடர ஜென்ஃபோன் 6 தற்போது Asus 6Z என்று பெயரை மாற்றம் செய்துள்ளது.

Asus 6Z Smartphone Price, specifications  மற்றும் இதர விபரங்கள்

ஃப்ளிப்கார்ட்டில் இந்த போன் விற்பனைக்கு வருகின்றது. ஆசூஸ் ஜென்ஃபோன் 6 மே 16ம் தேதி ஸ்பெய்னில் வெளியானது. இதன் விலை 499 யூரோக்கள் ஆகும். இந்திய விலையில் இதன் மதிப்பு 39,000 ரூபாயை தொடலாம்.

Asus 6Z  Smartphone சிறப்பம்சங்கள் :

80 டிகிரி வைட் ஆங்கிள் செல்ஃபி கேமராவும், 855 ஸ்நாப்ட்ராகன் ப்ரோசசரும் இந்த போனின் ஹைட்லைட்களாக இருக்கின்றது.

சிக்னேச்சர் க்ளாஸ் மற்றும் மெட்டல் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

6ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் வேரியண்ட்கள் மற்றும் 64ஜிபி,128ஜிபி, மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்களுடன் வெளியாக உள்ளது இந்த போன்.

பிங்கர் பிரிண்ட் சென்சார் போனின் பின்பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

முன்பக்க, பின்பக்க கேமராக்கள் என தனித்தனியாக பொருத்தாமல், ஃப்ளிப் மெக்கானிசம் மூலமாக இரட்டைக் கேமராக்களை பொருத்தி சாதனை படைத்திருக்கிறது அசூஸ்.

சோனியின் IMX586 கேமரா சென்சார், செயல்திறன் 48 எம்.பி மற்றும் 13 எம்.பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா பின்பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ளது. செல்ஃபி எடுக்க வேண்டும் என்றால் ஆட்டோமேட்டிக்காக அந்த ஃப்ளிபிங் டெக்னாலஜி கேமராக்களை முன்பக்கம் நகர்த்துகிறது.

5000 mAh பேட்டரி ( ஒரு முறை சார்ஜ் செய்தால் நாள் முழுவதும் பயன்படுத்திக் கொள்ளலாம்)

ஆண்ட்ராய்ட் 9.0 பை இயங்கு தளத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட ZenUI 6 இயங்கு தளத்தில் இயங்குகிறது.

ஐ.பி. ரேட்டிங், இன் – டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் மற்றும் வையர்லெஸ் சார்ஜர் இல்லாதது குறையாக பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க : சென்னை மற்றும் டெல்லிவாசிகளுக்கு புதிய போஸ்ட்பெய்ட் ப்ளான்களை வழங்கிய ஏர்டெல்

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Asus 6z smartphone price specifications launch and availability in india

Next Story
கூகுள் மேப்பில் இணைகிறது ஸ்பீடோமீட்டர்… நேவிகேசனில் அசத்தும் புதிய அப்டேட்கள்!Google Maps Navigation Speedometer
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express