Asus Zenfone Lite L1 : ஆசூஸ் நிறுவனம் மிக சமீபத்தில் பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட்டது. 6000 ரூபாய் மதிப்பிலான இந்த போன், இந்திய மார்கெட்டில் அக்டோபர் மாதம் அறிமுகமானது. ஜென்ஃபோன் லைட் L1 என்ற அந்த போன் பட்ஜெட் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
மேலும் படிக்க : ரெட் மீ நோட் 6 ப்ரோவை விட நோட் 5 ப்ரோ தான் சிறப்பாக வேலை செய்கிறது
Asus Zenfone Lite L1 சிறப்பம்சங்கள்
- 5.45 இன்ச் திரை மற்றும் குவால்காம் ஸ்நாப்ட்ராகன் 430 ப்ரோசசர் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. ஸ்கீரின் டூ பாடி ரேசியோ 18:9 ஆகும்.
- 13 எம்.பி கொண்ட ஒற்றை பின்பக்க கேமராவை கொண்டுள்ளது இந்த போன்.
- செல்பி கேமராவின் செயல்திறன் 5 எம்.பி. ஆகும்.
- ரெட்மி 6ஏ மற்றும் ஹானர் 7எஸ் போன்களுக்கு போட்டியாக இந்த போன்கள் களம் இறக்கப்பட்டுள்ளன.
- 3000 mAh சேமிப்புத் திறன் கொண்ட பேட்டரி இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
- சேமிப்புத் திறன் : 2ஜிபி RAM உடன் கூடிய 16GB இண்டெர்நெல் ஸ்டோரேஜினை கொண்டிருக்கிறது இந்த போன்.
- ப்ளாஸ்டிக் மெட்டிரியல்கள் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது இந்த போன். சிறிய அளவில் இருப்பதால் உபயோகிக்க மிகவும் எளிமையானதாக இருக்கும் இந்த போன்.
- பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளுடனே வெளியாகிறது இந்த போன். ஆண்ட்ராய்ட் ஓரியோ ஓ.எஸ் இயங்கு தளத்தை அடிப்படையாக கொண்ட ஜென்யூ.ஐ இயங்கு தளத்தில் வேலை செய்கிறது இந்த போன்.
- ஒரு முறை சார்ஜ் செய்தால் 9 மணி நேரம் 44 நிமிடங்களுக்கு தாக்குப் பிடிக்கிறது இந்த போன்.
Asus Zenfone Lite L1 கேமரா
இதில் எடுக்கப்படும் புகைப்படங்கள் மிகவும் துல்லியமாகவும், அழகாகவும் இருக்கிறது என்பது குறிப்பிடப்படுகிறது. பட்ஜெட் விலையில், நல்ல புகைப்படங்களை எடுக்கும் போனை வாங்க விரும்பினால் உங்களின் சாய்ஸ் இந்த போன் தான்.

