Asus Zenfone Max M2 : நாளை வெளியாக உள்ளது ஆசூஸ் நிறுவனத்தின் ஜென்ஃபோன் மேக்ஸ் M2 மற்றும் ஜென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ M2 ஸ்மார்ட் போன்கள். ஏற்கனவே ரஷ்யாவில் இந்த இரண்டு போன்களும் வெளியாகிவிட்டன. இந்நிலையில் இந்தியாவில் நாளை வெளியாக இருக்கிறது இந்த இரண்டு போன்கள். பட்ஜெட் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் ஏற்ற வகையில் இந்த போன்களின் விலை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Snapdragon™ 632 Processor – Perfect 10
Stock Android™ Experience – Perfect 10
Price…
Find out in our surprise launch of the Zenfone Max M2 on 11th December at 12.30 pm. pic.twitter.com/6i0bISGMok
— ASUS India (@ASUSIndia) 8 December 2018
Asus Zenfone Max M2 போனின் சிறப்பம்சங்கள்
6.3 இன்ச் அளவுள்ள டிஸ்பிளே, மிகவும் மெல்லிய பெசல் விட்த்துடன் வெளியாகிறது.
குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 632 ப்ராசசர் கொண்டு செயல்படும் இந்த போனின் பேட்டரி திறன் 4000 mAh ஆகும்.
ஒரு முறை இந்த போனை சார்ஜ் செய்தால் இரண்டு நாட்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
நோட்ச் டிஸ்பிளேவுடன் வரும் இந்த போனின் ஃபினிஷிங் மேட் ஃபினிஷிங்காக இருக்கிறது. ப்ரோ M2வானது க்ளோஸி ஃபினிஷிங்கில் வெளியாகிறது.
இதன் ரெசலியூசன் 1520 x 720 பிக்சல்களாகும்
அளவு : 158 mm x 76 mm x 7.7 mm
மேலும் படிக்க : ரெட்மீ நோட் 5 ப்ரோவிற்கு போட்டியாக களம் இறங்கும் Asus Zenfone Max Pro M2
Asus Zenfone Max M2ன் இதர சிறப்பம்சங்கள் மற்றும் அறிமுக விழா
வேரியண்ட்டுகள் : 3 ஜிபி மற்றும் 4 ஜிபி RAM வேரியண்ட்டுகளில் வெளியாகிறது இந்த போன். 32 அல்லது 64 ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜ்ஜில் வெளியாகும் இந்த போனின் சேமிப்புத் திறனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 2 TB வரை அதிகரித்துக் கொள்ளலாம்.
கேமரா : இரட்டை பின்பக்க கேமராக்கள் ( 13MP with f/1.8 aperture + 2MP ) பொருத்தப்பட்டிருக்கிறது. செல்ஃபி கேமராவின் செயல்திறன் 8MP ஆகும்.
ஆண்ட்ராய்ட் ஓரியோ இயங்கு தளத்தில் இயங்கும்.
நாளை நடக்க இருக்கும் இந்த போனின் அறிமுக விழாவினை லைவ்வாக பார்க்க ஏற்பாடு செய்திருக்கிறது ஆசூஸ் நிறுவனம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.