அசுஸ் தனது இரண்டாவது முழுத்திரை ஸ்மார்ட்போனை வெளியிடுகிறது

அசுஸ் தனது 2வது முழுத்திரை ஸ்மார்ட்போனை வெளியிட உள்ளது. இந்த வெளியிட்டு செய்தியை ரஷ்யாவில் உள்ள தனது அதிகாரபூர்வ வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.

By: November 30, 2017, 5:15:29 PM

அசுஸ் தனது இரண்டாவது முழுத்திரை ஸ்மார்ட்போன் “ஜேன்போன் மாக்ஸ் பிளஸ் (எம் 1)”யை வெளியிட உள்ளது. இந்த வெளியிட்டு செய்தியை ரஷ்யாவில் உள்ள தனது அதிகாரபூர்வ வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. விரைவில் வர இருக்கும் இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் மற்ற குறிப்புகள் ஏதும் வெளியிடப்படவில்லை. இந்த ஸ்மார்ட்போன் வெள்ளி, கருப்பு மற்றும் தங்க நிறத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலே கூறியது போல் “ஜென்போன் மாக்ஸ் பிளஸ் (எம் 1)” அசுஸ் இரண்டாவது முழுத்திரை ஸ்மார்ட்போன் ஆகும். இந்நிறுவனத்தின் முதல் முழுத்திரை கைபேசி “ஜென்ஃபோன் பெகாசஸ் 4S” ஆகும். இதுவே அசுசின் முதல் 18:9 விகிதம் திரை கொண்ட ஸ்மார்ட்போன். “ஜென்போன் மாக்ஸ் பிளஸ் (எம் 1) ஏறக்குறைய “ஜென்ஃபோன் பெகாசஸ் 4S” வடிவத்தில்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜென்ஃபோன் பெகாசஸ் 4S சீனாவில் மட்டும் அசுஸ் அறிமுகப்படுத்தியது. ஆனால் ஜேன்போன் மாக்ஸ் பிளஸ் (எம் 1) உலகளவில் வெளியிடப்படும்.

ஜென்போன் மாக்ஸ் பிளஸ் (எம் 1) 5.7 அங்குல FHD + (2160 x 1080) ஐபிஎஸ் டிஸ்ப்ளே மற்றும் 18: 9 விகிதாச்சாரத்தை கொண்டுள்ளது. 2 ஜிபி ரேம் அல்லது 3 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி அல்லது 32 ஜிபி விரிவாக்கக்கூடிய சேமிப்புடன் இந்த ஸ்மார்ட்போன் அமையும். மேலும் இது மீடியா டெக் MT6750T செயலி மூலம் இயங்கும். 4130mAh பேட்டரி மற்றும் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் உள்ளது. அண்ட்ராய்டு 7.1 நௌகட் அப்டேட்டை இது கொண்டுள்ளது.

இரண்டு லென்சுகள் உடன் 16 மற்றும் 8 மெகா பிக்சல் பின் பக்க கேமராவும், 8 மெகா பிக்சல் முன்பக்க கேமராவும் இதில் உள்ளது. மேலும் LED ஃப்ளாஷ் இணைக்கப்பட்டுள்ளது. வீடியோ எடுக்கும்போழுதே புகை படம் எடுக்கும் வசதியும் இதில் உள்ளது. ப்ளூடூத் 4.0, ஜிபிஎஸ், வைஃபை மற்றும் இரட்டை சிம் போன்ற இணைப்புகள் அமைந்துள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Asus zenfone max plus m1 with 5 7 inch 189 display listed online ahead of launch

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X