/indian-express-tamil/media/media_files/GGn7lYQfOuAa9ZxZZxei.jpg)
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேக விழா நாளை (ஜன.22) நடைபெற உள்ள நிலையில் இஸ்ரோவின் தேசிய தொலை உணர்வு மையம் (NRSC) விண்வெளியில் இருந்து உள்நாட்டு செயற்கை கோள் மூலம் கோயிலின் பிரம்மாண்ட கட்டமைப்பை படம் எடுத்துள்ளனர்.
என்.ஆர்.எஸ்.சி கூற்றுப்படி, கட்டுமானத்தில் உள்ள இந்த கோவில், கும்பாபிஷேக விழாவிற்கு கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பு, டிசம்பர் 16, 2023 அன்று இந்திய செயற்கைக்கோள்களால் படம் எடுக்கப்பட்டது என்று கூறியுள்ளது.
செயற்கைக்கோள் படங்களில், மீண்டும் புனரமைக்கப்பட்ட தஷ்ரத் மஹால் மற்றும் சரயு நதி ஆகியவை ராமர் கோயிலுக்கு அருகில் இருப்பதைக் காணலாம். மேலும் புதிதாக புதுப்பிக்கப்பட்ட அயோத்தி ரயில் நிலையத்தையும் செயற்கைக் கோள் படத்தில் காணலாம்.
ராமர் கோவில் கும்பாபிஷேக விழா
கோவிலின் முதல் பகுதி கட்டுமானப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில் நாளை (ஜன.22) பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ராம் லல்லா சிலை "பிரான் பிரதிஷ்டை" செய்யப்படுகிறது.
பாரம்பரிய நாகரா பாணியில் கோயில் வளாகம் கட்டப்பட்டுள்ளது. 380 அடி நீளம் (கிழக்கு-மேற்கு திசை), 250 அடி அகலம் மற்றும் 161 அடி உயரம் கொண்டதாக வளாகம் இருக்கும். கோவிலின் ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் மற்றும் மொத்தம் 392 தூண்கள் மற்றும் 44 நுழைவு வாயில்கள் கொண்டிருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.