மார்பிள் பினிஷ், 50MP ட்ரிபிள் கேமிரா... இந்திய சந்தையில் நவம்பரில் வெளியாகிறது ஐக்யூ ஸ்மார்ட்போன்!

அதிநவீன வடிவமைப்பு, சக்திவாய்ந்த கேமராக்கள் மற்றும் பிரம்மாண்டமான செயல்திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ள ஐக்யூ 15, சந்தையில் உள்ள மற்ற ஃபிளாக்ஷிப் போன்களுக்கு ஒரு கடுமையான போட்டியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

அதிநவீன வடிவமைப்பு, சக்திவாய்ந்த கேமராக்கள் மற்றும் பிரம்மாண்டமான செயல்திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ள ஐக்யூ 15, சந்தையில் உள்ள மற்ற ஃபிளாக்ஷிப் போன்களுக்கு ஒரு கடுமையான போட்டியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

author-image
Meenakshi Sundaram S
New Update
iQOO 15 Price in India

மார்பிள் ஃபினிஷ், 50MP ட்ரிபிள் கேமிரா... இந்திய சந்தையில் நவம்பரில் வெளியாகிறது ஐக்யூ ஸ்மார்ட்போன்!

ஐக்யூ நிறுவனத்தின் புதிய அதிநவீன ஸ்மார்ட்போனான ஐக்யூ 15 சீனாவைத் தாண்டி, உலகச் சந்தைக்கு வரத் தயாராகிவிட்டது. இதுவரை சீனாவில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், இந்த ஃபிளாக்ஷிப் போன் பற்றிய அனைத்து விவரங்களும் கசிந்துள்ளன. குறிப்பாக, ஐக்யூ 15 உடன், பிரத்யேகமான OriginOS இந்தியாவிற்குள் நுழைகிறது, இது பயனர்களின் அனுபவத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்நுட்ப உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள iQOO 15-ன் அம்சங்கள், புதிய வடிவமைப்பு மற்றும் பல்வேறு நாடுகளில் எதிர்பார்க்கப்படும் விலையைப் பற்றி இப்போது விரிவாகப் பார்ப்போம்.

Advertisment

ஐக்யூ 15-ன் முக்கிய அம்சம் அதன் கேமரா அமைப்புதான். இந்த போன், பின்புறத்தில் மூன்று 50MP சென்சார்களைக் கொண்டுள்ளது. 50MP மெயின் கேமரா போட்டோ எடுக்கும்போது ஏற்படும் அதிர்வுகளைச் சரிசெய்யும் OIS (Optical Image Stabilization) வசதியுடன் வருகிறது. 50MP அல்ட்ரா வைட் ஆங்கிள் பரந்த காட்சிகளைத் துல்லியமாகப் பதிவு செய்யும். 50MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ இதுவும் OIS வசதியுடன், 3x ஆப்டிகல் ஜூம் மூலம் தொலைவில் உள்ள காட்சிகளைத் தெளிவாகப் படம் பிடிக்கும் திறன் கொண்டது. செல்ஃபிகள், வீடியோ கால்களுக்கு முன்புறத்தில் 32MP கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

ஐக்யூ 15 தனித்துவமான தோற்றத்துடன் வருகிறது. இதன் பின்புறத்தில், கண்கவர் சலவைக் கல் (Marble) போன்ற ஃபினிஷிங் கொடுக்கப்பட்டு உள்ளது. இதை மேலும் சிறப்பாக்க, கேமரா அமைப்பைச் சுற்றி RGB விளக்குகள் ஒளிர்கின்றன. இந்த லைட் உங்களுக்கு வரும் அறிவிப்புகள், இசை மற்றும் நீங்க விளையாடும் கேம்களுக்கு ஏற்ப நிறம் மாறி ஒளிரும். இது கேமிங் பிரியர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தைத் தரும் என்பதில் சந்தேகமில்லை. ஐக்யூ 15 ஆனது, அசுரத்தனமான செயல்திறனை வெளிப்படுத்தும் சக்தி கொண்டது.

6.85-இன்ச் 2K+ கர்வ்டு சாம்சங் M14 8T LTPO AMOLED டிஸ்ப்ளே அற்புதம். இதன் 144Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் வியக்கவைக்கும் 6,000 nits உச்ச பிரகாசம் ஆகியவை கேமிங் மற்றும் திரைப்பட அனுபவத்தை உச்சத்திற்குக் கொண்டு செல்லும். போனின் இதயமான சிப்செட், Qualcomm ஸ்னாப்டிராகன் 8 லைட் ஜென் 5 ஆகும். அசுர வேகத்தில் செயல்படக்கூடியது. கிராபிக்ஸ் பணிகளுக்காக Adreno 850 GPU உடன் இணைக்கப்பட்டு உள்ளது. அதிநவீன ஆண்ட்ராய்டு 16-ஐ அடிப்படையாகக் கொண்ட புதிய OriginOS 6.0 இயங்குதளத்தில் இயங்குகிறது.

Advertisment
Advertisements

இந்தியா, அமெரிக்கா மற்றும் துபாய் உள்ளிட்ட உலகச் சந்தையில், நவம்பர் 25, 2025-க்குள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இதன் ஆரம்ப விலை சுமார் ரூ.59,999 ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் பிரத்யேகமாக அமேசான் வழியாகக் கிடைக்கும். அதிநவீன வடிவமைப்பு, சக்திவாய்ந்த கேமராக்கள் மற்றும் பிரம்மாண்டமான செயல்திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ள ஐக்யூ 15, சந்தையில் உள்ள மற்ற ஃபிளாக்ஷிப் போன்களுக்கு ஒரு கடுமையான போட்டியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Technology

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: