Chandrayaan 2: சந்திரயான் 2 விண்கலத்தை வரும் ஜூலை 15ம் தேதி நிலவுக்கு ஏவுகிறது இந்தியா. இதை முன்னிட்டு, ISRO ஒரு சுவாரஸ்யமான கேள்வியை தனது ட்விட்டர் பக்கத்தில் முன் வைத்துள்ளது. அதாவது, 'நிலவுக்கு நீங்கள் என்ன கொண்டுச் செல்ல வேண்டும் என விரும்புகிறீர்கள்' என்ற கேள்வியை கேட்க, பலரும் சுவாரஸ்யமாக பதில் அளித்திருக்கின்றனர்.
இந்திய வரைபடம், உணவு, காற்று போன்றவற்றை எடுத்துச் செல்லுங்கள் என்று சிலரும், நம் தாய் நாட்டின் ஒரு பிடி மண்ணை அங்கு கொண்டு போடுங்கள் என்றும் சிலரும் பதிவிட, ஒருவர் 'நிலவில் இருந்து தண்ணீர் எடுத்துக் கொண்டு வாருங்கள்' என்று பதிவிட்டிருக்கிறார்.
பெரும்பாலானோர் இந்திய தேசியக் கொடியை நிலவில் நட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர்.
நிலவில் தென் துருவ பகுதிகளை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட உள்ள சந்திரயான் 2 விண்கலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட உள்ளது.
அதற்கேற்ப திங்கட்கிழமை அதிகாலை 2. 51 மணிக்கு விண்ணில் ஏவுவதற்கு பணிகள் நடைபெற்று வருகிறது. மழை வந்தாலும் சந்திரயான் 2 விண்ணில் செலுத்துவதில் எந்தவித பாதிப்பும் இருக்காது. முற்றிலும் ரெயின் ப்ரூப் ( மழையால் பாதிக்காத வகையில் ) வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.