750 ரெசிபிகள், சமையல் இனி ஸ்மார்ட்... ஏ.ஐ. உதவியுடன் வேகமாக சமைக்கும் அப்லையன்ஸ் 2.0 அறிமுகம்!

பெங்களூரைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான Upliance AI, அடுத்த தலைமுறை ஸ்மார்ட் சமையல் சாதனத்தை ரூ.39,999 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் புதிய சாதனம், சமையலை தானியங்கி முறையில் செய்யும் நவீன கருவியாகும். இது 160 டிகிரி செல்சியஸ் வரை உணவை 40% வேகமாக சூடாக்கும் திறன் கொண்டது.

பெங்களூரைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான Upliance AI, அடுத்த தலைமுறை ஸ்மார்ட் சமையல் சாதனத்தை ரூ.39,999 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் புதிய சாதனம், சமையலை தானியங்கி முறையில் செய்யும் நவீன கருவியாகும். இது 160 டிகிரி செல்சியஸ் வரை உணவை 40% வேகமாக சூடாக்கும் திறன் கொண்டது.

author-image
WebDesk
New Update
Upliance AI

750 ரெசிபிகள், சமையல் இனி ஸ்மார்ட்... ஏ.ஐ. உதவியுடன் வேகமாகச் சமைக்கும் அப்லையன்ஸ் 2.0 அறிமுகம்!

சமையல் என்பது சிலருக்கு ஒரு கலை; பலருக்கு அது சவாலான பணி. இனி அந்த சவால்களை மறந்துவிடுங்கள்! உங்கள் சமையலறைக்கு ஒரு புதிய நண்பன் வந்துவிட்டான் அப்லையன்ஸ் 2.0. ஏ.ஐ தொழில்நுட்பத்தில் அசத்தும் பெங்களூருவின் அப்லையன்ஸ் ஏ.ஐ. நிறுவனம், அவர்களின் சமையல் உதவியாளரை அறிமுகப்படுத்தியுள்ளது. இது வெறும் டிவைஸ் அல்ல, உங்கள் சமையல் அனுபவத்தை முற்றிலும் மாற்றியமைக்க வந்த புரட்சிகரமான கண்டுபிடிப்பு.

என்ன ஸ்பெஷல்?

Advertisment

அதிவேக சமையல்: இந்த சாதனம் 160 டிகிரி செல்சியஸ் வரை உணவை 40% வேகமாகச் சூடாக்கும் திறன் கொண்டது. இனி, அவசர நாட்களில் சமையல் என்பது ஒரு நொடிப் பொழுதில் முடியும் வேலைதான். இதில் உள்ள கண்ணாடி மூடி மற்றும் மெய்நிகர் சுடர் காட்டி (virtual flame indicator) ஆகியவை, நீங்கள் அடுப்பில் சமைப்பது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தும். தொழில்நுட்பம் நிறைந்திருந்தாலும், பாரம்பரிய சமையல் அனுபவத்தைத் தவறவிட மாட்டீர்கள்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

விலை மற்றும் அப்டேட்கள்: இதன் விலை ரூ.39,999. ஏற்கெனவே அப்லையன்ஸ் 1.0 வைத்திருப்பவர்களுக்கு, புதிய ரெசிபிகள் மற்றும் அப்டேட்கள் தொடர்ந்து கிடைக்கும். கூடவே, ஒரு சிறப்பு மேம்படுத்தல் திட்டமும் உள்ளது. அப்லையன்ஸ் 2.0-ல் 750-க்கும் மேற்பட்ட ரெசிபிகள் ஏற்கனவே உள்ளீடு செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, இதன் சிறப்பம்சமே,ஏ.ஐ.ரெசிபி ஜெனரேஷன். அதாவது, உங்களுக்காக புதிய ரெசிபிகளை இது உருவாக்கும். ஒருமுறை ரெசிபிகளை சிங்க் செய்துவிட்டால் போதும், இணையம் இல்லாமல் கூட அவற்றை அணுகலாம்.

"இந்திய மக்கள் வேகமாக, ஆரோக்கியமாக, சுவையாக சமைக்க விரும்புகிறார்கள். இதை நாங்கள் புரிந்துகொண்டோம். அதனால்தான், அப்லையன்ஸ் 2.0-ஐ உருவாக்கினோம்," என்கிறார் நிறுவனத்தின் இணை நிறுவனர் மஹெக் மோடி. "இது, உங்களின் தனிப்பட்ட சுவைக்கு ஏற்ப உணவை மாற்றியமைக்கும். பிஸியான நாட்களில் கூட ஆரோக்கியமான உணவைச் சாத்தியமாக்கும்."

ஏன் இந்த சாதனம்?

Advertisment
Advertisements

இது வெறும் சமையல் கருவி மட்டுமல்ல. உள்ளமைக்கப்பட்ட எடை அளவீட்டு வசதியுடன், ஊட்டச்சத்து மதிப்புகளையும் இது கணக்கிடுகிறது. இதனால், குறைந்த எண்ணெய், அதிக புரதம், நார்ச்சத்து நிறைந்த உணவுகள் அல்லது குழந்தைகளுக்கு ஏற்ற உணவுகள் என உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சமைக்கலாம்.

ஒரே ஜாரில் சமையல் முடிவதால், சுத்தம் செய்வது மிகவும் எளிது. "சாதனம் கழற்றி வைக்கக்கூடிய பாகங்களைக் கொண்டிருப்பதால், சமைத்து முடித்ததும் நொடியில் சுத்தம் செய்துவிடலாம்" என்று நிறுவனம் கூறுகிறது.

Shark Tank Season 3 நிகழ்ச்சியில் பங்கேற்று அசத்திய இந்த நிறுவனம், தங்கள் தயாரிப்பு ஒரு விளம்பர வித்தை அல்ல, உண்மையான சமையல் அறிவியலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்று உறுதியளிக்கிறது. இனி சமையலறையில் நிஜமான உதவியாளர் ஒருவர் இருக்கிறார். உங்கள் அடுத்த சமையல் அனுபவம், இந்த ஸ்மார்ட் கருவியுடன் நிச்சயம் சுவாரஸ்யமாக இருக்கும்.

Technology

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: