டிவி-யை தூக்கி எறிங்க... சினிமா தரத்தில் இனி கேமிங்; வந்தாச்சு பென்க்யூ கேமிங் புரொஜெக்டர்கள்!

பென்க்யூ நிறுவனம் தனது அதிநவீன X-சீரிஸ் கேமிங் ப்ரொஜெக்டர்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் X3000i, X500i ஆகிய மாடல்கள் கேமிங் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.

பென்க்யூ நிறுவனம் தனது அதிநவீன X-சீரிஸ் கேமிங் ப்ரொஜெக்டர்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் X3000i, X500i ஆகிய மாடல்கள் கேமிங் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.

author-image
Meenakshi Sundaram S
New Update
BenQ Immersive Gaming Projectors

சினிமா தரத்தில் கேமிங்.. ஆண்ட்ராய்டு டிவி, டால்பி அட்மாஸ் உடன் பென்க்யூ கேமிங் புரொஜெக்டர்கள்!

நீங்க கேமர் (Gamer) என்றால், உங்க கேமிங் உலகத்தை பெரிய திரைக்கு மாற்றத் தயாரா? பென்க்யூ (BenQ) நிறுவனம், டிவிகளுக்கு போட்டியாக, ப்ரொஜெக்டர்களிலேயே மிக அசாத்தியமான கேமிங் அனுபவத்தை வழங்க X-சீரிஸ் கேமிங் ப்ரொஜெக்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், எக்ஸ்-3000i மற்றும் எக்ஸ்-500i மாடல்கள்தான் இந்திய சந்தையில் பெரும் பேசுபொருளாக உள்ளன. பென்க்யூ எக்ஸ்-3000i மாடல், ஓப்பன்-வேர்ல்ட் கேம்கள் மற்றும் திரையரங்கு அனுபவத்தை (Cinematic Experience) விரும்புபவர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

Advertisment

சிறப்பம்சங்கள்

ட்ரூ 4K UHD (3840x2160) தெளிவு, 3000 ANSI Lumens (4LED லைட் சோர்ஸ்) பிரகாசம், 100% DCI-P3 CinematicColor (திரையரங்கு தர நிறங்கள்) வண்ணத் துல்லியம், 4ms @ 1080p/240Hz (அதிவேக கேமிங்) மற்றும் 16ms @ 4K/60Hz  கேமிங் வேகம், 5W x 2 treVolo ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் Dolby Atmos ஆதரவு. Google-சான்றளிக்கப்பட்ட ஆண்ட்ராய்டு டிவி ஓ.எஸ். இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது.

பென்க்யூ எக்ஸ்-3000i ப்ரொஜெக்டர் தற்போது இந்தியாவில் வாங்குவதற்கு கிடைக்கிறது. இது உயர் ரக பிரீமியம் மாடல் என்பதால், இதன் விலை சுமார் ரூ.3,20,000 முதல் ரூ.4,00,000 வரை விற்பனையாளரைப் பொறுத்து மாறுபடுகிறது. இது Dedicated Home Cinema மற்றும் Hardcore Open-World கேமிங் அனுபவத்தை விரும்புபவர்களுக்கானது. பென்க்யூ எக்ஸ்-500i மாடல், சிறிய அறைகள் அல்லது பெட்ரூம்களை எளிதில் கேமிங் அரங்காக மாற்ற விரும்புபவர்களுக்காக உருவாக்கப்பட்டு உள்ளது. இது ஒரு ஷார்ட்-த்ரோ (Short-Throw) ப்ரொஜெக்டர் ஆகும்.

சிறப்பம்சங்கள்

4K UHD (Pixel-Shift மூலம்) தெளிவு, 2200 ANSI Lumens (4LED லைட் சோர்ஸ்) பிரகாசம், குறைந்த தூரத்தில் இருந்து பெரிய திரையைக் காட்டுகிறது (1.5 மீட்டருக்குள் 100 இன்ச்), 4.2ms @ 1080p/240Hz மற்றும் 16.7ms @ 4K/60Hz கேமிங் வேகம், FPS Crosshair அம்சம், ஆட்டோ கேம் மோடு (PS, Xbox, Switch-ஐ தானாக அடையாளம் காணும். பென்க்யூ எக்ஸ்-500i மாடலும் இந்தியாவில் எளிதில் வாங்குவதற்குக் கிடைக்கிறது. இதன் விலை சுமார் ரூ.1,70,000 முதல் ரூ.2,75,000 வரை விற்பனையாளரைப் பொறுத்து மாறுபடுகிறது. இது கச்சிதமான அமைப்பில் சக்திவாய்ந்த கேமிங் அனுபவத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு ஏற்றது.

Advertisment
Advertisements

ஏன் கேமிங்கிற்கு ப்ரொஜெக்டர்?

பொதுவாக, ப்ரொஜெக்டர்கள் கேமிங்கிற்கு உகந்தது அல்ல என்று நம்பப்படுகிறது. ஆனால் BenQ-வின் இந்தச் சீரிஸ், அந்தப் பார்வையை மாற்றியுள்ளது. இந்த ப்ரொஜெக்டர்கள் அதிவேக 4ms வரை உள்ளீட்டுத் தாமதத்தைக் (Input Lag) கொண்டிருப்பதால், ஒரு மானிட்டர் அல்லது டிவியில் விளையாடுவது போன்ற துல்லியமான மற்றும் தாமதமில்லாத அனுபவம் கிடைக்கும்.

100 முதல் 200 இன்ச் வரையிலான மெகா திரையில் விளையாடும்போது, நீங்கள் கேமிற்குள் முழுவதுமாக மூழ்கிவிட்டதைப் போன்ற அனுபவம் கிடைக்கும் (Immersive Gaming). உண்மையான திரையரங்கு தரமான வண்ணங்களைப் பெறுவதால், கேம் உலகங்கள் மேலும் துடிப்பாகவும், யதார்த்தமாகவும் இருக்கும். எனவே, உங்க பட்ஜெட் மற்றும் இட வசதிக்கு ஏற்ற பென்க்யூ கேமிங் ப்ரொஜெக்டரைத் தேர்வுசெய்து, கேமிங் அனுபவத்தை ஒரு படி மேலே உயர்த்தத் தயாராகுங்கள்.

Technology

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: