Advertisment

Best 5G Phones Under 30,000: ஒன் பிளஸ், நத்திங் முதல் விவோ வரை: ரூ.30,000 விலையில் கிளாஸி ஸ்மார்ட் போன்கள் இங்கே

Top 5G Phones Under 30,000: ரூ.30,000 விலையில் அட்டகாசமான 5ஜி ஸ்மார்ட் போன்கள் குறித்து பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
phones

Best 5G Phones Under ₹30,000 in September 2024: அமோசான், பிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளங்கள் விரைவில் தள்ளுபடி விற்பனையை தொடங்க உள்ளன. நீங்கள் மிட்-ரேஞ் பட்ஜெட்டில் ரூ.30,000  விலையில் சிறந்த வசதிகளுடன் 5ஜி  போன் வாங்க வேண்டும் என்று நினைத்தால் இந்த ஆப்ஷன்களை பார்க்கலாம். 

Advertisment

OnePlus Nord 4 

ஒன் பிளஸ் நார்ட் 4 ஆனது 2772 × 1240 பிக்சல் ரிசஸ்யூசன் உடன்  120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 2,150 nits இன் உச்ச பிரகாசத்துடன் 6.74-இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

Qualcomm Snapdragon 7+ Gen 3 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட் போன் டூயல் கேமரா செட்அப் கொண்டுள்ளது. OIS மற்றும் EIS உடன் 50MP Sony LYTIA ப்ரைமரி சென்சார் மற்றும் 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸுடன் போன் வருகிறது. முன் பக்கத்தில் 16MP செல்ஃபி கேமரா உள்ளது. 

அதே நேரத்தில் முன்பக்கத்தில் உள்ள அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமராக்கள் 30fps-ல் 1080p வீடியோவை பதிவு செய்ய முடியும். ஒன் பிளஸ் நார்ட் 4  5,500mAh பேட்டரி மற்றும் 100W SUPERVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை கொண்டுள்ளது. இது அமேசான் தளத்தில் தற்போது ரூ.29.998க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆஃபரில் மேலும் விலை குறைவாக பெறலாம். 

Redmi Note 13 Pro Plus

ரெட்மி நோட் 13 ப்ரோ ப்ளஸ் போன் MediaTek Dimensity 7200-Ultra 5G சிப்செட்  மூலம் இயக்கப்படுகிறது.  120Hz வளைந்த AMOLED டிஸ்ப்ளே உள்ளது. அதோடு  இன்-டிஸ்ப்ளே ஃபின்கர் ப்ரிண்ட்  சென்சார் உடன் வருகிறது. 

கேமராவை பொறுத்தவரை ஃபிளாக்ஷிப்-லெவல் 200 எம்பி ப்ரைமரி கேமரா உள்ளது. ரெட்மி நோட் 13 ப்ரோ ப்ளஸ் 5,000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது மற்றும் 120 W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது. வெறும் 20 நிமிடங்களில் 0-வில் இருந்து 100% சார்ஜ் செய்யப்பட்டுவிடும். இது ஆன்லைன் தளத்தில் ரூ.29,499க்கு விற்பனை ஆகிறது. 

Nothing Phone 2a Plus

Nothing Phone 2a Plus ஆனது 120Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட்டுடன் 6.7-இன்ச் AMOLED டிஸ்ப்ளே மற்றும் 12GB மற்றும் 256GB சேமிப்பகத்துடன் MediaTek Dimensity 7350 Pro சிப்செட் உடன் வருகிறது

இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 14ஐ அடிப்படையாகக் கொண்ட நம்பகமான மற்றும் ப்ளோட்வேர் இல்லாத நத்திங் ஓஎஸ் பதிப்பில் இயங்குகிறது. இது பிரதான சென்சாரில் OIS உடன் 50 MP டூயல் பேக் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது மற்றும் 50 W சார்ஜிங் ஆதரவுடன் 5,000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. 

ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ.27,999க்கு விற்பனை ஆகிறது. ஆஃபர் வரும் போது இந்த விலை குறைய வாய்ப்புள்ளது. 

Vivo T3 Ultra

விவோ டி3 அல்ட்ரா 5ஜி 1.5K (2800 x 1260)  தீர்மானம் கொண்ட 6.78-இன்ச் 3D வளைந்த AMOLED திரையைக் கொண்டுள்ளது. 120Hz புதுப்பிப்பு வீதத்தை ஆதரிக்கிறது. Vivo T3 அல்ட்ரா, MediaTek Dimensity 9200+ சிப் மூலம் இயக்கப்படுகிறது, 12GB வரை ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. 

பேட்டரியை  பொறுத்தவரை 5500mAh பேட்டரி உடன்  80-வாட் வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது. அதோடு இந்த போனில் விவோவின் ப்ரத்யேக   ‘Aura Ring Light.’ வசதி உள்ளது. 

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

    Special Story
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment