இந்தியாவில் 5ஜி சேவை கடந்தாண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் 5ஜி சேவையைத் தொடங்கி விரிவுபடுத்தி வருகின்றன. அந்த வகையில் 5ஜி சேவையைப் பெற உங்கள் ஸ்மார்ட் போன்கள் 5ஜி ஆதரவு பெற வேண்டும். ரூ. 20,000 பட்ஜெட்டில் சிறந்த 5ஜி ஸ்மார்ட் போன்களை வாங்கலாம். அதுகுறித்து இங்கு பார்ப்போம்.
Advertisment
ரெட்மி 12 5ஜி
ஜியாமி சமீபத்தில் அறிமுகப்படுத்திய ரெட்மி 12 5ஜி இன்றுவரை பட்ஜெட்டுக்கு ஏற்ற போனாக உள்ளது. குவால்காமின் ஸ்னாப்டிராகன் 4 ஜெனரல் 2 சிப்செட் கொண்ட முதல் போனாகும். ஸ்னாப்டிராகன் 695 போலவே செயல்படும் ஃபோன் பிரீமியம் போல் தெரிகிறது மற்றும் மிகவும் வேகமாக உள்ளது.
ரெட்மி 12 5ஜி ஆனது 2MP டெப்த் சென்சார் உடன் 50MP ஷூட்டரைக் கொண்ட டூயல் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. நீங்கள் பட்ஜெட் 5G ஃபோனைத் தேடுகிறீர்கள் என்றால் இது சிறந்த தேர்வாக இருக்கும். ரூ.11,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
Advertisment
Advertisements
சாம்சங் கேலக்சி எம் 34
Exynos 1280 சிப்செட் மூலம் இயக்கப்படும் இந்த ஃபோன், 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, நீங்கள் போன் அதிகம் பயன்படும் பயனராக இருந்தால் இது உங்களுக்கு உதவியாக இருக்கும்.
கேலக்ஸி M34 ஆனது 4 வருட ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் 5 வருட பாதுகாப்பு இணைப்புகளை பெறும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இந்த வசதி வேறு எந்த நிறுவனமும் வழங்கவில்லை. ரூ.18,999 என்ற அடிப்படை விலையில் கிடைக்கிறது. வங்கிச் சலுகைகள் மூலம் மேலும் பணத்தைச் சேமிக்கலாம்.
மோட்டோரோலா ஜி73
மோட்டோரோலா ஜி73 என்பது 5ஜி இணைப்பு மற்றும் ப்ளோட்வேர் இல்லாத ஆண்ட்ராய்டு அனுபவத்தை விரும்புவோருக்கு ஒரு திடமான தேர்வாகும். MediaTek Dimensity 930 சிப்செட் மூலம் இயக்கப்படும். இந்த போன், 8MP அல்ட்ராவைடு லென்ஸால் ஆதரிக்கப்படும் 50MP கேமராவுடன் வருகிறது.
5,000mAh பேட்டரி கொண்டுள்ள இந்த போன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. மோட்டோரோலா G73 என்பது ஒரு திடமான மிட்-ரேஞ் ஸ்மார்ட் போன் ஆகும். 16,999 ரூபாயில் பிளிப்கார்ட் தளத்தில் பெறலாம்.
போகோ X5 ப்ரோ
இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட, Poco X5 Pro சமீபத்தில் விலை குறைப்பு செய்யப்பட்டது. ஸ்னாப்டிராகன் 778 சிப்செட்டைக் கொண்டுள்ளது, இது நத்திங் ஃபோனையும் (1) இயக்குகிறது. 120Hz AMOLED ஸ்கிரீனுடன் வருகிறது.
கேமரா முன்பக்கத்தில், இது 108MP ப்ரைமரி கேமரா, 8MP அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ சென்சார் உடன் வருகிறது. ப்ரைமரி கேமராவைப் பொறுத்தவரை, இது பகல் மற்றும் இரவு நேரங்களில் உண்மையில் செயல்படுகிறது. 6ஜிபி ரேம், 128ஜிபி ஸ்ரோரேஜ் கொண்ட போன் ரூ.20,099 என்ற விலையில் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. வங்கி ஆஃபர் மூலம் ரூ.19,999 விலைக்கு பெறலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“