scorecardresearch

Best 5G Phones: தீபாவளி சேல்ஸ்; டாப் 5G போன்கள் இவைதான்!

ஜியோவின் True 5G மாடல் விரைவில் சந்தைக்கு வரவிருக்கும் நிலையில், 5G போன்களை வாங்குவதற்கு மக்கள் உற்சாகமாக காத்திருக்கின்றனர்.

Best 5G Phones: தீபாவளி சேல்ஸ்; டாப் 5G போன்கள் இவைதான்!

Best 5G Phones: இந்த பண்டிகை காலத்தில், பொருட்களுடன் வருகின்ற தள்ளுபடிக்காக மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். அந்த வரிசையில் தற்போது 5ஜி போன்கள் இந்தியாவில் வரவிருக்கிறது.

ஜியோவின் True 5G மாடல் விரைவில் சந்தைக்கு வரவிருக்கும் நிலையில், 5G போன்களை வாங்குவதற்கு மக்கள் உற்சாகமாக காத்திருக்கின்றனர்.

ஆன்லைன் ஷாப்பிங் இணையதளங்களில் ஒன்றான அமேசான் இந்திய அல்லது பிளிப்கார்ட் போன்றவற்றில் 5ஜி போன் விற்கப்படுகிறது.

இந்த புதிய மாடல் போனை வாங்குவதற்கு முன்பு, அவற்றின் முக்கிய அம்சங்கள், விவரக்குறிப்புகள், விலை ஆகியவற்றை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அவற்றின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

1. OnePlus 10R 5G

OnePlus பிராண்டின் புதிய மாடலான 10R 5G போனிற்கு மக்களினிடையே நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இந்த போன் இந்திய சந்தையில் ரூ.32,999க்கு விற்கப்படுகிறது. மேலும், இது அமேசானின் தீபாவளி விற்பனையின் தள்ளுபடி கீழ் விற்கப்படுகிறது. இதில் 5000 mAh பேட்டரி உள்ளது. இது 6.7-இன்ச் (AMOLED) திரையைக் கொண்டுள்ளது. வேகமாக சார்ஜ் செய்யும் வசதி இயக்கப்பட்டுள்ளது. இது சிறந்த ஒலி தரத்திற்காக ஸ்டீரியோ ஸ்பீக்கர்களையும் கொண்டுள்ளது.

2. Samsung Galaxy S21 FE 5G

SAMSUNG Galaxy S21 FE 5G போனின் ஆரம்ப விலை இந்திய சந்தையில் மட்டும் ரூ.54,999 ஆக உள்ளது. மேலும் இது நீர்-எதிர்ப்பு திறன் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவைக் கொண்டுள்ளது. குறிப்பிட்ட வங்கி அட்டைகளைக் கொண்டு வாங்கினால் கூடுதல் சலுகைகள் உள்ளது என்று கூறுகின்றனர்.

இந்த போனிற்கு 128 ஜிபி உள் சேமிப்பு மற்றும் 8 ஜிபி ரேம் மற்றும் மற்றொன்று 256 ஜிபி உள் சேமிப்பு நினைவகம் மற்றும் 8 ஜிபி ரேம் என இரண்டு மாடல்கள் உள்ளன.

3. OPPO Reno 8 5G

இந்த பண்டிகைக் காலத்தில் OPPO Reno 8 5G போன் 23% பம்பர் தள்ளுபடியில் கிடைக்கிறது. இந்திய சந்தையில் ரூ.38,000 என்ற வழக்கமான விலைக்கு பதிலாக ரூ.30,000 இந்த மாடலை வாங்கலாம். கோட்டக் மஹிந்திரா கார்டு அல்லது எஸ்.பி.ஐ. கார்டைப் பயன்படுத்தினால், கூடுதல் தள்ளுபடிகளைப் பெறலாம். இந்த போனின் படப்பிடிப்புக்கு அல்ட்ரா நைட் வீடியோ பயன்முறையாகிறது.

இது Shimmer Black மற்றும் Shimmer Gold போன்ற அழகான வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த போனின் எடை 179 கிராம் மட்டுமே மற்றும் உள் சேமிப்பு நினைவகம் 128 ஜிபி, ரேம் 8 ஜிபி, ரெனோ 8 5ஜி 6.5 இன்ச் டிஸ்பிளே அளவைக் கொண்டுள்ளது. இது ஒரு (AMOLED) திரை மூலம் பாதுகாக்கப்படுகிறது.

4. Xiaomi 11T Pro 5G

Xiaomi இந்தியா தனது Xiaomi 11T Pro 5G போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. அமேசானின் தீபாவளி விற்பனையின் போது ஆர்டர் செய்தால், இந்திய சந்தையில் ரூ.34,999க்கு வாங்க முடியும். இந்தியாவில் இந்த மாடலை ரூ.49,999க்கு விற்கின்றனர். ஃபோன் மூன்று கேமரா அமைப்பு மற்றும் 5G நெட்வொர்க் இணைப்புடன் தரமான செயல்பாட்டுடன் வழங்கப்படுகிறது.

5. POCO F4 5G

இந்த ஃபோன் Snapdragon 8+ Gen 1 சிப்செட்டைக் கொண்டிருக்கிறது. இது தீபாவளியின் போது விற்பனைக்கு வரும். இந்த மாடல் இதனின் வழக்கமான விலையான 28,000 ரூபாய்க்கு பதிலாக 25,000 ரூபாய்க்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Best 5g smartphone sale on this festive season

Best of Express