பேட்டரி லைஃப் ரொம்ப முக்கியமா? உங்களுக்கான ஸ்மார்ட்போன்கள் இவை!

சில நாட்களுக்கு முன்பு, ஏசஸ் ரோக் போன் 3 இந்தியாவில் விலைக் குறைப்பைப் பெற்றது. இப்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.49,999 விலையிலிருந்து குறைந்து ரூ.46,999-க்கு கிடைக்கிறது.

By: November 3, 2020, 8:04:39 AM

Best Battery Life Phone 2020, Samsung, Asus, Realme, Techno Spark Mobiles Tamil News : 6,000 mAh அளவுக்கு சக்திவாய்ந்த பேட்டரியை கொடுத்த முதல் பிராண்ட் சாம்சங். அதிக சேமிப்பிடம், பெரிய பேட்டரி மற்றும் ஒட்டுமொத்த நல்ல செயல்திறன் கொண்ட தொலைபேசியை விரும்புபவர்களையே நோக்கமாக இந்த நிறுவனம் கொண்டிருந்தது. சராசரி பயனர் வழக்கமாக நீண்ட நேரம் உழைக்கக்கூடிய, அடிப்படை பணிகளைச் சிறப்பாகச் செய்யக்கூடிய மற்றும் நிறைய வீடியோக்கள் அல்லது புகைப்படங்களைச் சேமிக்கக்கூடிய தொலைபேசியைத் தேடுவதால், சாம்சங் அதிக வாடிக்கையாளர்களை ஈர்த்தது. ரியல்மீ, இன்ஃபினிக்ஸ் மற்றும் பிற பிராண்டுகளும் சமீபத்தில் 6,000 mAh பேட்டரி தொலைபேசிகளை விற்பனை செய்யத் தொடங்கின. இப்படிப்பட்ட சிறப்பு அம்சங்களைக் கொண்ட சாதனங்களின் பட்டியலைப் பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எம் 31s

ரூ.18,499 விலையில் 6 ஜிபி RAM சாம்சங் கேலக்ஸி எம் 31s விற்கப்படுகிறது. அமேசானில் ரூ.14,500 வரை எக்ஸ்சேஞ் சலுகையும் உள்ளது. அதாவது, இந்த ஸ்மார்ட்போனை மிகக் குறைந்த விலையில் வாங்க முடியும். இந்த பரிமாற்ற சலுகையின் அளவு உங்கள் தற்போதைய தொலைபேசியின் நிலையைப் பொறுத்தது. இந்த விலைக்கு, 128 ஜிபி சேமிப்பிடத்தைப் பெறலாம். இது நிறைய தரவுகளையும், தேவையற்ற வாட்ஸ்அப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் சேமிப்பதற்குக்கூட போதுமானது.

விவரக்குறிப்புகளைப் பொறுத்தவரை, கேலக்ஸி எம் 31s, 6.5 இன்ச் முழு HD + 60 ஹெர்ட்ஸ் சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ் எக்ஸினோஸ் 9611 சிப்செட் உள்ளது. மேலும், ஆண்ட்ராய்டு 10 இயக்க முறைமையைக் கொண்டிருக்கிறது. அதாவது, பயனர்கள் அண்ட்ராய்டு 12-ஐயும் அனுபவிக்க முடியும். 25W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 6,000 mAh பேட்டரி இதில் உள்ளது. பின்புற கேமரா அமைப்பில் 64MP சென்சார், 12MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ், 5MP டெப்த் சென்சார் மற்றும் 5MP மேக்ரோ லென்ஸ் ஆகியவை உள்ளன. முன்பக்கத்தில் செல்ஃபிக்களுக்கான 32 MP கேமரா உள்ளது.

ரியல்மீ நர்சோ 20

ரியல்மீ நர்சோ 20 ஸ்மார்ட்போனை ஃப்ளிப்கார்ட்டில் ரூ.10,499 விலைக்கு வாங்கலாம். எக்ஸ்சேஞ் சலுகைக்குச் சென்றால், இந்த கைப்பேசியை ரூ.10,000-க்கு கீழ் பெற முடியும். இந்த குறிப்பிடப்பட்ட விலை, 64 ஜிபி சேமிப்பக உள்ளமைப்புக்கானது. 128 ஜிபி சேமிப்பு மாடலுக்கு, ரூ.1,000 கூடுதலாகப் பணம் செலுத்த நேரிடும். இது, ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் மூலம் இயங்குகிறது மற்றும் மீடியா டெக் ஹீலியோ ஜி 85 SoC-ஐ கொண்டுள்ளது. இந்த சாதனம் 6.5 இன்ச் HD + டிஸ்ப்ளே மற்றும் 6,000 mAh பேட்டரியை 18W ஃபாஸ்ட் சார்ஜுடன் துணைபுரிகிறது. பின்புறத்தில், 48MP கேமரா, 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ சென்சார் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம் 21

இடைப்பட்ட சாம்சங் தொலைபேசிகளில், நல்ல காட்சி தரம், பெரிய பேட்டரி, போதுமான சேமிப்பு மற்றும் நல்ல செயல்திறனை இந்த ஸ்மார்ட்போனில் பெறலாம். சாம்சங் கேலக்ஸி எம் 21 தற்போது ரூ.12,499 விலையில் கிடைக்கிறது. அமேசானில் எக்ஸ்சேஞ் அல்லது இ.எம்.ஐ விருப்பங்களைத் தேர்வு செய்யலாம். இந்த குறிப்பிடப்பட்ட விலை ஸ்மார்ட்போன், 64 ஜிபி சேமிப்பு மாடலுக்கானது. அதிக சேமிப்பிடத்தை பெற விரும்பினால், 128 ஜிபி வேரியன்ட்டிற்கு ரூ.14,999 வரை செலவாகும். 6.4 அங்குல முழு HD + சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளேவை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கிறது. இது கொரில்லா கிளாஸ் 3-ஆல் பாதுகாக்கப்படுகிறது. மேலும், எக்ஸினோஸ் 9611 செயலி மற்றும் 15 வாட் வேகமான சார்ஜருடன் 6,000mAh பேட்டரியையும் கொண்டுள்ளது. பின்புற கேமரா அமைப்பில் 48MP கேமரா, 8MP அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 5MP டெப்த் சென்சார் ஆகியவை உள்ளன. செல்ஃபிக்களுக்கு, 20 MP கேமரா இருக்கிறது.

டெக்னோ ஸ்பார்க் பவர் 2

இந்தியாவில் டெக்னோ ஸ்பார்க் பவர் 2-ன் விலை ரூ.9,999. ஒரு சில வங்கி சலுகைகள், இ.எம்.ஐ விருப்பம் மற்றும் எக்ஸ்சேஞ் சலுகையும் உள்ளன. அவற்றை ஃப்ளிப்கார்ட் வழியாக தேர்வு செய்யலாம். அம்சங்களைப் பொறுத்தவரை, 48 நிட்ஸ் பிரகாசத்துடன் 7 இன்ச் HD + டிஸ்ப்ளே இதில் உள்ளது. மீடியா டெக் ஹீலியோ P22 SoC-ஆல் இயக்கப்படுகிறது. மேலும், 4 ஜிபி RAM மற்றும் 64 ஜிபி சேமிப்பகத்தால் ஆதரிக்கப்படுகிறது. இந்த தொலைபேசியில் 6000 mAh பேட்டரி உள்ளது. மற்றும் 18 வாட்ஸ் வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது. குவாட் ரியர் கேமரா அமைப்பில் 16 MP கேமரா, வைட்-ஆங்கிள் லென்ஸ், மேக்ரோ லென்ஸ் மற்றும் டெப்த் சென்சார் உள்ளன. முன்பக்கத்தில் 16 MP செல்பி கேமரா உள்ளது.

ஏசஸ் ரோக் போன் 3

சில நாட்களுக்கு முன்பு, ஏசஸ் ரோக் போன் 3 இந்தியாவில் விலைக் குறைப்பைப் பெற்றது. இப்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.49,999 விலையிலிருந்து குறைந்து ரூ.46,999-க்கு கிடைக்கிறது. இந்த விலை 8 ஜிபி RAM மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலுக்கானது. வாடிக்கையாளர்கள் இந்த கைபேசியை ஃப்ளிப்கார்ட் மூலம் பெறலாம். பழைய தொலைபேசியின் பரிமாற்றத்தில் ரூ.14,850 வரை தள்ளுபடி சலுகையும் உள்ளது. ஸ்னாப்டிராகன் 865 ப்ளஸ் 5 ஜி SoC, 145Hz புதுப்பிப்பு விகிதத்துடன் 6.59 அங்குல அமோலெட் டிஸ்ப்ளே மற்றும் HDR10 + ஆதரவுடன் ஏசஸ் ரோக் போன் 3 வருகிறது. இதனோடு 30W வேகமான சார்ஜிங் கொண்ட 6,000 mAh பேட்டரியைப் பெறலாம். ஏர்டிரிகர் 3 சிஸ்டத்துடன் இந்த மொபைல் வருகிறது. மூன்று பின்புற கேமரா அமைப்பும் உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Samsung asus realme techno spark long life battery mobiles in india tamil news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X