/tamil-ie/media/media_files/uploads/2023/08/tamil-indian-express-2023-08-31T104358.151.jpg)
இன்றைய காலகட்டத்தில் லேப்டாப் இன்றியமையாததாக உள்ளது. அலுவலகப் பணி மட்டுமல்லாது, பள்ளி, கல்லூரி படிப்புகளுக்கும் லேப்டாப் அவசியமாக உள்ளது. அந்த வகையில் மாணவர்களுக்கு ஏற்ப குறைந்த விலையில் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட லேப்டாப் குறித்து இங்கு பார்ப்போம்.
பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மாணவர்கள் பயன்படுத்துவதற்கு ஏற்ப வசதிகள் கொண்ட லேப்டாப்களை வழங்குகிறன்றன.
1. Acer Aspire 5 (2022)
இந்த லேப்டாப் அனைத்து மாணவர்களும் பயன்படுத்தும்படியான ஓவரால் லேப்டாப். 16ஜிபி வரை ரேம் வசதி, 512ஜிபி வரை SSD ஸ்டோரேஜ் வசதியும் உள்ளது. 17.3 இன்ச் 1080p ஸ்கீரின், கிராபிக்ஸ் கார்டு உள்ளது. ஐ7 இன்டல் கோர் மற்றும் Ryzen 7 5825U சி.பி.யூ கொண்டு இயங்குகிறது. அமேசான் தளத்தில் இந்தலேப்டாப் ரூ.35,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
2. Lenovo IdeaPad Duet 5 Chromebook
இந்த லேப்டாப் அழகான தோற்றத்துடன் 1080p OLED டிஸ்ப்ளே, 8ஜிபி ரேம் மற்றும் Qualcomm Snapdragon 7c Gen2 ப்ராசஸர் கொண்டுள்ளது.
இது சிறந்த திறன் குரோம்புக் வகை லேப்டாப்களில் ஒன்றாகும், இதை அனைத்து மாணவர்களும் பயன்படுத்தும் ஓவரால் லேப்டாப் ஆகும். இது அமேசான் மற்றும் நிறுவனத்தின் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்படுகிறது.
3. Dell XPS 13 (2022)
இது சிறந்த performance லேப்டாப் ஆகும். 1 டி.பி வரை ஸ்டேரேஜ் வசதி, 32 ஜிபி ரேம் மற்றும் இன்டல் கோர் ஐ7 கொண்டுள்ளது. 3.4" FHD+ (1920 x 1200) InfinityEdge Non-Touch ஸ்கிரின் கொண்டுள்ளது. அதோடு விளையாடுவதற்கு ஏற்ப கிராபிக்ஸ் கார்டும் கொண்டுள்ளது. அமேசான் தளத்தில் ரூ.35,990 விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.