Advertisment

சாம்சங் கேலக்சி எஸ்23 எப்ஃஇ, நார்ட் 4; ரூ.30,000 விலையில் சிறந்த கேமரா ஃபோன்கள் இங்கே

ரூ.30,000 விலையில் சிறந்த கேமரா ஃபோன்கள் பற்றி இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
mid-rangeph

புதிய மிட்-ரேஞ்ச் கேமரா சென்ட்ரிக் ஃபோனைத் தேடுகிறீர்கள் என்றால் இங்கு சில போன் பட்டியல்கள் உள்ளன.  ரூ.30,000 விலையில் சிறந்த கேமரா ஃபோன்கள் பற்றி இங்கு பார்ப்போம். 

Advertisment

மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ

ரெனோ 12 ப்ரோ மற்றும் CMF ஃபோன் (1) போனில் இயங்கும் அதே ப்ராசஸர் இந்த போனும் கொண்டுள்ளது. டைமென்சிட்டி 7300 சிப்செட்டைக் கொண்டுள்ளது, இது 6.4-இன்ச் LTPO p-OLED திரையைக் கொண்டுள்ளது மற்றும் MIL-STD-810H பாதுகாப்பு மற்றும் IP68 டஸ்ட் மற்றும் நீர் எதிர்ப்பை வழங்குகிறது.

எட்ஜ் 50 நியோ மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, அதில் 50எம்பி முதன்மை கேமரா மற்றும் 13எம்பி அல்ட்ராவைடு சென்சார் மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 10 எம்.பி டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவை உள்ளன. 

Edge-50-Neo

4,310mAh பேட்டரி  கொண்டுள்ளது இந்த போன். மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் வரும் இந்த போன் பிளிப்கார்ட்டில் ரூ.23,999க்கு வாங்கலாம்.

OnePlus Nord 4

இது ஒன்பிளஸ் நிறுவனத்தின் சமீபத்திய மிட்-ரேஞ்ச் போனாகும். ஸ்னாப்டிராகன் 7+ ஜெனரல் 3 சிப்செட்டைக் கொண்ட இந்த ஃபோன், ஆண்ட்ராய்டு 14 இன் அடிப்படையில் ஆக்சிஜன் ஓஎஸ் 14.1 இல் இயங்குகிறது, ஒன்பிளஸ் 4 வருட OS புதுப்பிப்புகளை உறுதியளிக்கிறது. இது 6.74-இன்ச் AMOLED பேனலைக் கொண்டுள்ளது, இது வெளியில் பார்க்க அழகாக இருக்கும்.

இந்த போனில் இரண்டு கேமரா லென்ஸ்கள் உள்ளன.   டெலிஃபோட்டோ லென்ஸ் இல்லை என்றாலும், ப்ரைமரி லென்ஸாக 50 எம்.பி கொண்டுள்ளது. 

OnePlus Nord 4 ஆனது 100W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, ஃபோனின் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி வெர்ஷன் ப்ளிப்காட்டில் ரூ.29,999க்கு கிடைக்கிறது, அதே நேரம் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கார்டு மூலம் தள்ளுபடிகளைப் பெறலாம்.

ஆங்கிலத்தில் படிக்க:  Best camera phones under Rs 30,000: Galaxy S23 FE, Nord 4, and more

சாம்சங் கேலக்சி எஸ்23 FE

Exynos 2200 சிப்செட்டைக் கொண்டுள்ள Samsung Galaxy S23 FE ஆனது Corning Gorilla Glass 5 ஆல் பாதுகாக்கப்பட்ட 6.4-inch 120Hz AMOLED திரையைக் கொண்டுள்ளது.

Galaxy-S23-FE-Express-Photo

12MP அல்ட்ராவைடு சென்சார் மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் வழங்கும் 8MP டெலிஃபோட்டோ லென்ஸுடன் 50MP பிரைமரி லென்ஸ் இருக்கும்.  சாம்சங் கேலக்சி எஸ்23 FE 4,500mAh பேட்டரி உடன் 25W சார்ஜிங்களை ஆதரிக்கிறது.  

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் போன் தற்போது பிளிப்கார்ட்டில் ரூ.29,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment