குறைந்த விலையில் பெஸ்ட் ‘டேட்டா பேக்’ இவைதான்: உங்க சாய்ஸ் எது?

BSNL Airtel Jio Vodafone data plans வீட்டிலிருந்து வேலை செய்யும் தன் பயனர்களுக்காக பல்வேறு திட்டங்களை நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியிருக்கின்றன.

BSNL Airtel Jio Vodafone data plans வீட்டிலிருந்து வேலை செய்யும் தன் பயனர்களுக்காக பல்வேறு திட்டங்களை நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியிருக்கின்றன.

author-image
WebDesk
New Update
BSNL Airtel Jio Vodafone prepaid data plans tamil news

BSNL Airtel Jio Vodafone prepaid data plans

Best Data Offers: BSNL, Airtel, Jio, Vodafone prepaid data offers : சமீபத்தில் பி.எஸ்.என்.எல் வீட்டிலிருந்து வேலை செய்யும் தன் பயனர்களுக்காக ரூ.251 விலைக்கு ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த குறிப்பிடப்பட்ட விலைக்கு, மொத்தம் 70 ஜிபி டேட்டாவை இந்நிறுவனம் அளிக்கிறது. ஆனால், இந்தத் திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் மட்டுமே வருகிறது.

Advertisment

ஒர்க் ஃப்ரம் ஹோம் எஸ்.டி.வி-யிலிருந்து ரூ.151 சேவையும் உள்ளது. இது 40 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும், 10 ஜிபி கூடுதல் டேட்டாவை பெற விரும்பினால், பிஎஸ்என்எல்லின் ரூ.56 மதிப்புள்ள பேக்கை தேர்வு செய்துகொள்ளலாம். இந்த திட்டம் ரீசார்ஜ் செய்யப்பட்ட நாளிலிருந்து பத்து நாட்களுக்கு செல்லுபடியாகும். பிஎஸ்என்எல்லின் ப்ரீபெய்ட் டேட்டா திட்டங்களுடன் ஒப்பிடுகையில் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் என்ன வழங்குகின்றன என்பதைப் பார்ப்போம்.

ஜியோ ப்ரீபெய்ட் டேட்டா திட்டங்கள்

ரிலையன்ஸ் ஜியோ தற்போது ஒர்க் ஃப்ரம் ஹோம் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த அடிப்படை திட்டத்திற்கு ரூ.151 மட்டுமே செலவாகும். அதே விலைக்கு, 30 ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும், 40 ஜிபி டேட்டாவுடன் ரூ.201 ரீசார்ஜ் திட்டமும் உள்ளது. நீங்கள் கூடுதல் டேட்டாவை பெற விரும்பினால், ஜியோவின் ரூ 251 ப்ரீபெய்ட் திட்டம் உங்களுக்கு 50 ஜிபி தரும். ஒப்பீட்டளவில், பிஎஸ்என்எல்லின் ரூ.251 திட்டம் வாடிக்கையாளர்களுக்கு 20 ஜிபி கூடுதல் டேட்டா அளிக்கிறது. அனைத்து ஜியோ திட்டங்களும் 30 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் வருகின்றன.

Advertisment
Advertisements

ஏர்டெல் ப்ரீபெய்ட் டேட்டா திட்டங்கள்

ரூ.251 விலையில் ப்ரீபெய்ட் 4 ஜி டேட்டா திட்டத்தை ஏரடெல் கொண்டுள்ளது. இது, 50 ஜிபி டேட்டாவுடன் செயல்படுகிறது. இந்த பேக்கில் எந்த வாலிடிட்டியும் இல்லை. அதாவது உங்கள் தற்போதைய பேக் செல்லுபடியாகும் வரை இந்த 4 ஜி டேட்டா திட்டம் செல்லுபடியாகும். ரூ.401 ரீசார்ஜ் திட்டத்தில் 30 ஜிபி டேட்டா மட்டுமல்லாமல், டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவையும் ஒரு வருடத்திற்கு வழங்குகிறது. இந்த திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறது. மேலும், ரூ.48 விலையில் பட்ஜெட் ப்ரீபெய்ட் திட்டத்தையும் ஏர்டெல் கொண்டுள்ளது. இது 3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

Vi (வோடபோன்) ப்ரீபெய்ட் டேட்டா திட்டங்கள்

Vi, பல 4G டேட்டா பேக்குகளை வழங்குகிறது. ரூ.251 ப்ரீபெய்ட் டேட்டா பிளான், ஜியோவைப் போலவே 28 நாட்களுக்கு 50 ஜிபி நன்மையை வழங்குகிறது. 100 ஜிபி டேட்டாவுடன் வோடபோன் ரூ.351 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தையும் கொண்டுள்ளது. இந்த பேக் 56 நாட்களுக்கு செல்லுபடியாகும். மேலும், Vi மூவிகள் மற்றும் டிவி பயன்பாடுகளுக்கான அணுகலையும் வழங்கும். மேலும், வோடபோன் வாடிக்கையாளர்கள் ரூ.351 திட்டம், 50 ஜிபி டேட்டா மற்றும் ஒரு வருட ஜீ 5 பிரீமியம் சந்தாவை 28 நாட்களுக்கு உள்ளடக்கியது. ரூ.16-க்கு, 3 ஜிபி டேட்டாவை அளிக்கிறது. இது ஏர்டெலின் ரூ.48 திட்டத்தை விட மிகவும் மலிவானது. 12 ஜிபி டேட்டா விரும்புவோர், ரூ.48 Vi ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை வாங்கலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"

Jio Bsnl Airtel

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: