/tamil-ie/media/media_files/uploads/2019/02/airtel-jio-vodafone-759.jpg)
Jio, Airtel, Vodafone prepaid plans under Rs 150
Best IPL Data Packs Jio, Airtel, Vodafone : இந்தியன் ப்ரீமியம் லீக் தொடர்கள் சனிக்கிழமை துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஐ.பி.எல் போலவே மிகவும் விறுவிறுப்பான ப்ளான்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் முனைப்பில் ஈடுபட்டு வருகிறது டெலிகாம் நிறுவனங்கள். ஏர்டெல், வோடஃபோன், மற்றும் ஜியோ வழங்கும் சிறப்பு ஆஃபர்கள் என்ன ?
Best IPL Data Packs Jio, Airtel, Vodafone
ஜியோ 197 ரூபாய்க்கு ஒரு ப்ளான் வழங்கி வருகிறது. நாள் ஒன்றிற்கு இரண்டு ஜிபி வரை டேட்டாவை இலவசமாக வழங்குகிறது இந்த ப்ளான். 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த பேக் மூலமாக நீங்கள் இலவச உள்ளூர் வெளியூர் கால்கள் மற்றும் எஸ்.எம்.எஸ். அனுப்பும் வசதிகளை பெறலாம்.
ஜியோ 299 ரூபாய்க்கு மற்றொரு பேக்கை வழங்குகிறது. 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த பேக்கின் மூலமாக நாள் ஒன்றிற்கு 3ஜிபி வரை டேட்டா பெற்றுக் கொள்ளலாம்.
வோடஃபோன்
511 ரூபாய் மதிப்புள்ள இந்த பேக்கின் வேலிடிட்டி 84 நாட்களாகும். இதன் மூலம் நீங்கள் இலவச கால்கள் பேசிக் கொள்ள இயலும். நாள் ஒன்றிற்கு நூறு எஸ்.எம்.எஸ்கள் அனுப்பிக் கொள்ள இயலும்.
ஏர்டெல் 249 ப்ரீபெய்ட்
2ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ்கள் மற்றும் இலவச அழைப்புகள் என்ற சிறப்பு வசதிகளை இந்த பேக் உங்களுக்கு அளிக்கிறது. இதன் வேலிடிட்டியும் 28 நாட்களாகும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.